தமிழகத்தில் இன்று 937 பேருக்கு கொரோனா உறுதி
No commentsThursday, 31 December 2020
8:37:00 pmஊழல் தி.மு.க. உடைகிறதா? - சன் டிவி யில் அ.தி.மு.க. விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு....! கண்டனம் தெரிவித்த தி.மு.க., எம்.பி..
No commentsதிமுகவினர் நம்மை திசை திருப்புவார்கள்... அதற்கு ஆட்படாமல் நமது வேலையை நாம் பார்க்க வேண்டும் : அமைச்சர் சி.வி.சண்முகம்
No commentsபுத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
No commentsஅதிமுக தலைமையில் தான் கூட்டணி எடப்பாடியார் உறுதி
No comments
20 நாள்களுக்கு முன்பு இறந்த பெண் காவலர் சடலத்துடன் வீட்டிற்குள் ஜெபம்... திண்டுக்கல்லில் பரபரப்பு
No commentsஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினா் இன்று அத்துமீறித் தாக்குதல்
No commentsபாமகவினர் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.... கனவு கனவாகவே போகுமா.... ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் வேதனை
No commentsநியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் 2021 புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
No commentsதிருநெல்வேலியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார்.
No commentsசி.பி.எஸ்.இ., 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2021 மே 4-ல் தொடங்கி ஜூன் 10-ல் முடிவடையும் : அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
No commentsசட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்புதான் பள்ளிகள் பொதுத்தேர்வு குறித்து அட்டவணை வெளியீடு
No commentsசுகாதார சவால்கள் நிறைந்ததாக 2020 இருந்தது, சுகாதாரத் தீர்வுகள் அளிப்பதாக 2021 இருக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை
No commentsநிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர், கொரோனா காலத்தில் பொது மக்களைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து முன்களத்தில் நின்று பணியாற்றி வரும் 9 மில்லியன் டாக்டர்கள், சுகாதார அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார். விஞ்ஞானிகளின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
சிரமமான இந்த காலக்கட்டத்தில் ஏழைகளுக்கு முழு அர்ப்பணிப்புடன் உணவளித்த அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்தியா ஒன்றுபட்டு நின்றால் மிக மோசமான நெருக்கடிகளையும் திறமையாக சமாளிக்க முடியும் என்பதை இந்த ஆண்டு நிரூபித்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். சிறந்த நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா காலத்தில் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றியதில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். தடுப்பு மருந்து அளிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
இந்தியாவில் தயாரிக்கும் தடுப்பு மருந்துகள், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சரியான முறையில் சென்று சேருவதை உறுதி செய்யும் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். உலகின் மிகப் பெரிய அளவில் தடுப்பூசி மருந்து அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முழு வேகத்தில் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். முடிவடையும் ஆண்டில் நோய்ப் பரவலைத் தடுப்பதில் வெற்றி கண்டதைப் போல, தடுப்பூசி போடும் இயக்கத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்த அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் சுகாதாரக் கட்டமைப்பு, மருத்துவக் கல்வி வசதிகள் பெருகுவதுடன், குஜராத்தில் வேலைவாய்ப்புகளும் பெருகும் என்று மோடி கூறினார். நேரடியாக 5 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக அதே அளவிலும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார்.
கோவிட் பாதிப்புக்கு எதிராக குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், இந்த விஷயத்தில் குஜராத் மாநிலம் வழிகாட்டியாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டார். குஜராத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்பு வசதிகள், கொரோனா சவாலை எதிர்கொள்வதில் குஜராத்தின் சிறப்பான அணுகுமுறை ஆகியவை பற்றியும் மோடி பாராட்டு தெரிவித்தார். மருத்துவத் துறையில் குஜராத்தின் இந்த வெற்றிக்கு, இரண்டு பத்தாண்டு கால ஓய்வற்ற உழைப்பு, அர்ப்பணிப்பு, உறுதி ஆகிய பின்னணிகள் இருப்பதாக அவர் கூறினார்.
இதற்கு முன்னர், இந்தியாவில் 6 எம்ய்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே உருவாக்கப்பட்டு இருந்தன. அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் காலத்தில் 2003 ஆம் ஆண்டில் மேலும் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளில் 10 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த எய்ம்ஸ் மருத்துவமனைகளுடன், 20 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும் உருவாக்கப் படுகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டுக்கு முன்புவரையில், நமது சுகாதாரத் துறையின் பல்வேறு செயல்பாடுகள் வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருந்தன என்றும், 2014-க்குப் பிறகு, முழுமையான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டதால் நோய்த் தடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, நவீன சிகிச்சை வசதிகளை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றும் பிரதமர் தெரிவித்தார். ஏழைகளுக்கான சிகிச்சை செலவைக் குறைக்கவும், அதேசமயத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தொலைதூரப் பகுதிகளில் 1.5 மில்லியன் சுகாதார மற்றும் நலன் மையங்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் ஏற்கெனவே 50 ஆயிரம் மையங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன என்று பிரதமர் தெரிவித்தார். அவற்றில் குஜராத்தில் மட்டும் 5 ஆயிரம் மையங்கள் உள்ளன என்றார் அவர். சுமார் 7000 மக்கள் மருந்தக மையங்கள் மூலம், 3.5 லட்சம் ஏழைகள் குறைந்த விலைகளில் மருந்துகள் வாங்கியுள்ளனர். மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளைப் பிரதமர் பட்டியலிட்டார்.
2020 ஆம் ஆண்டு சுகாதார சவால்கள் நிறைந்ததாக இருந்தது என்றால், 2021 ஆம் ஆண்டு சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை அளிப்பதாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். சிறப்பான விழிப்புணர்வு மூலமாக சுகாதாரத் தீர்வுகளை நோக்கி உலகம் பயணிக்கும். 2020 சுகாதார சவால்களை சிறப்பாக எதிர்கொண்டதைப் போல, சுகாதாரத் தீர்வுகள் அளிப்பதில் 2021-ல் இந்தியா முக்கிய பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ நிபுணர்களின் திறமை, சேவை மனப்பான்மை, அதிக அளவில் தடுப்பு மருந்துகள் அளிப்பதில் உள்ள அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில், உலகிற்கு சிறந்த மற்றும் சிக்கனமான தீர்வுகளை நம்மால் அளிக்க முடியும் என்று பிரதமர் கூறினார். சுகாதாரத் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சுகாதாரத் தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து செயல்படுவதால், எல்லோருக்கும் சுகாதார சேவை கிடைக்கச் செய்ய முடியும். ``எதிர்கால ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தின் எதிர்காலத்தில் இந்தியா முக்கிய பங்காற்றப் போகிறது'' என்று திரு. மோடி கூறினார்.
நோய்கள் இப்போது உலக அளவில் பரவும்நிலையில், உலக அளவில் சுகாதாரத் தீர்வுகள் காண்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார். தேவைக்கு ஏற்ப தீர்வுகளை அளித்து இந்தியா தனது செயல்திறனை நிரூபித்துள்ளது. உலக ஆரோக்கியத்தின் மையமாக இந்தியா உருவாகி வருகிறது. 2021ல் நாம் இதை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அதிமுக அரசின் சாதனைகள் பல விதம்...! தொடரும் சாதனை.....
No commentsசமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் எப்போதும் முன்னோடி மாநிலமாக உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை அரசு அனைத்து உதவிகளையும் செய்கிறது என்கிற அளவுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
உதாரணமாக 2016 அதிமுக தேர்தல் அறிக்கையை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருந்தார். அந்த தேர்தல் அறிக்கையில், திருமண உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 4 சவரன் என்பது 8 சவரனாக உயர்த்தப்படும் என கூறியிருந்தார்.
இது வெற்றிகரமாக தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ரூ25,000 நிதி உதவி; பட்டம் அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் ரூ50,000 வழங்கப்படுகிறது.
கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பிறக்கின்ற குழந்தைகளுக்கான அனைத்து பொருட்களையும் உள்ளடக்கிய அம்மா பெட்டகம் வழங்கப்படுகிறது.
இதேபோல் சத்துணவுத் திட்டத்தில் மேம்பாடு, விவசாயிகளுக்கான குளிர்பதன கிடங்குகள், மருத்துவ கல்லூரிகள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு.
2016-ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இங்கே கொடுத்துள்ளோம். எவற்றை எல்லாம் அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது என்பதை வாசகர்களே தீர்மானித்து கொள்ளலாம்.
2016-ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கை அம்சங்கள்:
- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி (cellphone) விலையின்றி வழங்கப்படும்.
- வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும்.
- சமூக நலத்திட்டத்தின் கீழ், தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
- மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகையில் வைட்டமின் A வைட்டமின் D மற்றும் இரும்புச் சத்துகள் செறிவூட்டப்பட்ட (Fortified) ஆவின் பால் 1 லிட்டர் 25 ரூபாய் என குறைந்த விலையில் வழங்கப்படும்
- திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து
- 1 சவரன் (8 கிராம்) ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- அங்கன்வாடி மையங்கள் அனைத்துக்கும் எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு, பிரஷர் குக்கர் ஆகிய உபகரணங்கள் வழங்கப்படும்.
- நகர்ப்புறங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்தப்படும்
- திருநங்கையர் மற்றும் திருநம்பியர் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
- கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ், தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும்.
- கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
- 2016 முதல் 2021 வரையிலான 5 ஆண்டு காலத்தில் 40,000 கோடி அளவிற்கு பயிர்க் கடன் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
- மானாவாரி பயிர் சாகுபடியில் கறவை மாடுகள், ஆடுகள் வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படும்.
- தரிசு நிலங்கள் சீர்திருத்தப்பட்டு, நீராதார அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பயிர் செய்ய வழிவகை காணப்படும்
- தோட்டக்கலை விவசாயிகளுக்கு அவர்களது விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.
- அச்சு மற்றும் ஆரம் மாதிரி (hub and spoke model) தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை துறைகள் மூலம் திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 10 சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் விரிவாக்கப்படும். வாழை, இளநீர், மாம்பழம், திராட்சை மற்றும் காய்கறிகள் ஆகியவற்றிற்கென சிறப்பு வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்படும்.
- சூரிய சக்தியால் இயங்கும் விவசாய மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 80 சதவீத மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
- 10 எச்பி வரையிலான மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மானியம் வழங்கப்படும்.
- விவசாயிகள் பயன் பெறும் வகையில் கிடங்குகள் மற்றும் குளிர் பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.
- மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
- விவசாயிகளுக்கு தொடர்ந்து கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்
- டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஷேல் எரிவாயுத் திட்டம் போன்ற விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது.
- விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்வது அனுமதிக்கப்படமாட்டாது.
- விவசாயிகள் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யும் வகையில் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் கணினிமயமாக்கப்பட்டு மின்னணு ஏலமுறை (e-Tender) இணையதள வசதிகள் ஏற்படுத்தப்படும். விளைபொருட்களின் சந்தை விலை நிலவரம் குறித்த 'குறுஞ்செய்தி' சேவை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
- நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.
- கரும்புக்கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும்.
- சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- கொப்பரை விலை குறையும் போதெல்லாம் விவசாயிகளிடமிருந்து கொப்பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்; அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம் ஆகியவை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்
- ஒவ்வொரு ஆண்டும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.
- மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வு முறை தொடர்ந்து எதிர்க்கப்படும்.
- முதியோர்களுக்கு அனைத்து மருத்துவக் கல்லூரி மருவத்துவமனை மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் மூப்பியல் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.
- கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
- ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வகையில் Amma Banking Card வழங்கப்படும் நிதிச் சேவையை உறுதிபடுத்தும் வகையிலும், அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்தும் வகையிலும், 1,000 ரூபாய் வரை சுலபத் தவணையில் செலுத்தக் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். வாரம் 10 ரூபாய் என்ற அளவிற்கு திருப்பிச் செலுத்தக்கூடிய அளவில் இந்தக் கடன் அமையும். Amma Banking Card-ஐ பயன்படுத்தி அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளை செய்வதோடு, அனைத்து கட்டணங்கள் செலுத்துதல் மற்றும் அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு பயன்படுத்தும் விதமாக இந்த Amma Banking Card சேவை வழங்கப்படும்.
- அனைத்து அரசு சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும்.
- இல்லந்தோறும் இணையம் என்னும் சேவை அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு செம்மைப்படுத்தப்படும்
- அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு 'Set-top Box' விலையின்றி வழங்கப்படும்.