Type Here to Get Search Results !

விஜயதாரணிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து

 


பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது X பதிவில்,

காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரி விஜயதாரணி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, டெல்லியில், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு முருகன் மற்றும் தமிழக பாஜக மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் திரு அரவிந்த் மேனன், மாநில இணை பொறுப்பாளர் திரு பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

சகோதரி விஜயதாரணி அவர்களை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom