Type Here to Get Search Results !

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் MLA விஜயதாரணி...!



கன்யாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாக விஜயதாரணி பதவி வகித்து வருகிறார். விஜயதாரணி காங்கிரஸில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

கன்யாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாக விஜயதாரணி பதவி வகித்து வருகிறார். விஜயதாரணி, தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமைக் கொறடாவாகவும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

ஆனால் விஜயதரணிக்கு தமிழக அரசியலை விட டெல்லி அரசியலில் ஆர்வம் அதிகம். எனவே, எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் இறந்ததையடுத்து, கன்யாகுமரி லோக்சபா இடைத்தேர்தலில் எப்படியாவது சீட் பெற்று போட்டியிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை விஜயதாரணி மேற்கொண்டு வந்தார்.

இந்த முறை கன்யாகுமரி தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடம் விஜயதாரணி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய் வசந்தாவுக்கு சீட் கொடுக்க அரசியல் வட்டாரத்தில் பேச்சு வார்த்தை நடந்ததால் விஜயதாரணி கடும் அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள விஜயதாரணி பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயதாரணி பாஜகவில் இணையும் செய்தியை எதிர்க்கவோ ஆதரிக்கவோ இல்லை.

இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த விஜயதாரணி, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி பாஜக என்றும், நரேந்திர மோடியின் தலைமை நாட்டுக்கு அவசியம் என்றும் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom