Type Here to Get Search Results !

சுஷ்மா சுவராஜ் மகள் பாஜக வேட்பாளர் இது எப்படி நடந்தது..? ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சி சம்பவங்கள்...!

 புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து கடுமையான புகார்களை அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக சனிக்கிழமை இரவு வெளியிட்டது. மொத்தம் 195 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன.

பாஜகவின் இந்த வேட்பாளர் பட்டியல் அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. பா.ஜ.,வின் மேற்கு வங்க அன்சோல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பவன் சிங், தான் போட்டியிட முடியாது என அறிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் தங்களை வேட்பாளர்களாக அறிவிக்காததால் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். கோபமடைந்த பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், நாடாளுமன்றத்தில் கோட்சேவைப் புகழ்ந்ததற்காக பிரதமர் மோடி தன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்று அதிருப்தி அடைந்துள்ளார். குஜராத்தில் உள்ள மெஹ்சானா தொகுதியில் தன்னை வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜும் கடும் சவாலைச் சந்தித்துள்ளார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பன்சூரி சுவராஜ் மீது புகார் அளித்துள்ளது. எனவே பன்சூரி ஸ்வராஜை வேட்பாளராக பாஜக அறிவித்ததை திரும்பப் பெற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது. மன்சூரி சுவராஜ் மீது டெல்லி அமைச்சர் ஆதிஷி கூறிய குற்றச்சாட்டுகளின் தொகுப்பு:

லலித் மோடி வழக்கு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தவர் லலித் மோடி. ஆனால் லலித் மோடி மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் விஸ்வரூபம் எடுத்தன. இதன் காரணமாக லலித் மோடி இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார். சுஸ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் தான் இந்த லலித் மோடியின் பாஸ்போர்ட் வழக்கிற்காக கீழ்கோர்ட் முதல் உச்ச நீதிமன்றம் வரை வாதிட்டவர்.

மணிப்பூர் பெண்கள் நிர்வாணம்: மணிப்பூர் மாநிலத்தில், குக்கி - மைதே இனக்குழுக்களுக்கு இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. இந்த மோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். குக்கி பெண்களை மைதேய் கும்பல் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் பன்சூரி ஸ்வராஜ் வாதிட்டார். இப்போது டெல்லி பெண்களிடம் எப்படி ஓட்டு கேட்கிறார்? என்கிறார் ஆம் ஆத்மி.

சண்டிகர் மேயர் தேர்தல்: சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தின் படுகொலை என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. தேர்தலில், பா.ஜ.,வின் தேர்தல் அதிகாரி சட்டவிரோதமாக செயல்படும் வீடியோ வெளியாகி, சுப்ரீம் கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டு, கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திலும் பாஜகவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர் பன்சூரி சுவராஜ்.

என்ன செய்ய வேண்டும்?: இதுபோன்ற தேச விரோத சக்திகளுக்கு வக்காலத்து வாங்கும் பா.ஜ.க வேட்பாளராக பன்சூரி சுவராஜை அறிவித்ததை திரும்பப் பெற வேண்டும் என்பது ஆம் ஆத்மியின் கோரிக்கை. ஆனால் இதை பன்சூரி சுவராஜ் மறுத்துள்ளார்.

பன்சூரி ஸ்வராஜ்: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பன்சூரி ஸ்வராஜ், ஆம் ஆத்மி கூறும் காரணங்களுக்காக தான் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்று கூறினார். ஆம் ஆத்மி குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டதால் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom