Type Here to Get Search Results !

4 மாநிலங்களில் காலா அசார் - கருங்காய்ச்சல் பாதிப்பு : அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு


நான்கு மாநிலங்களில் காலா அசார் - கருங்காய்ச்சல் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு மேற்கொண்டார்.

பிகார் சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே, மேற்கு வங்க சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா, உத்தரப்பிரதேச மருத்துவம், சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் தாய் சேய் நல அமைச்சர். ஜெய் பிரதாப் சிங், ஜார்கண்ட் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நல அமைச்சர். பன்னா குப்தா ஆகியோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய டாக்டர். ஹர்ஷ் வர்தன், கருங்காய்ச்சலை ஒழிக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகக் கூறினார். 'மலேரியாவுக்குப் பிறகு உலகிலேயே இரண்டாவது பெரிய ஆட்கொல்லி நோய் கருங் காய்ச்சல் ஆகும். முறையான சிகிச்சை அளிக்கப்படாவிடில், 95 சதவீதம் பேர் இந்த நோயினால் உயிரிழக்கின்றனர்,' என்று அவர் கூறினார்.

முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 20 சதவீதம் பேருக்கு சிகிச்சைக்கு சில மாதங்களுக்குப் பிறகு ஒரு வகையான தோல் நோய் ஏற்படுவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் கூறினார்.

உத்தரப்பிரதேசம், பிஹார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் கருங்காய்ச்சல் பாதிப்புகள் இருப்பதாக அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், அசாம், ஹிமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கேரளா, சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் குறைந்த அளவில் பாதிப்புகள் இருப்பதாக அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom