Type Here to Get Search Results !

அதிமுக அரசின் சாதனைகள் பல விதம்...! தொடரும் சாதனை.....


திருமண உதவித் திட்டங்கள், விவசாயிகளுக்கான பயிர்க் கடன்கள், மின்கட்டண சலுகை என 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையின் போது அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது.

சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் எப்போதும் முன்னோடி மாநிலமாக உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை அரசு அனைத்து உதவிகளையும் செய்கிறது என்கிற அளவுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.


உதாரணமாக 2016 அதிமுக தேர்தல் அறிக்கையை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருந்தார். அந்த தேர்தல் அறிக்கையில், திருமண உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 4 சவரன் என்பது 8 சவரனாக உயர்த்தப்படும் என கூறியிருந்தார்.

இது வெற்றிகரமாக தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ரூ25,000 நிதி உதவி; பட்டம் அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் ரூ50,000 வழங்கப்படுகிறது.


கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பிறக்கின்ற குழந்தைகளுக்கான அனைத்து பொருட்களையும் உள்ளடக்கிய அம்மா பெட்டகம் வழங்கப்படுகிறது.


இதேபோல் சத்துணவுத் திட்டத்தில் மேம்பாடு, விவசாயிகளுக்கான குளிர்பதன கிடங்குகள், மருத்துவ கல்லூரிகள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு.


2016-ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இங்கே கொடுத்துள்ளோம். எவற்றை எல்லாம் அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது என்பதை வாசகர்களே தீர்மானித்து கொள்ளலாம்.


2016-ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கை அம்சங்கள்:

  • அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி (cellphone) விலையின்றி வழங்கப்படும்.
  • வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும்.
  • சமூக நலத்திட்டத்தின் கீழ், தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
  • மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகையில் வைட்டமின் A வைட்டமின் D மற்றும் இரும்புச் சத்துகள் செறிவூட்டப்பட்ட (Fortified) ஆவின் பால் 1 லிட்டர் 25 ரூபாய் என குறைந்த விலையில் வழங்கப்படும்
  • திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து
  • 1 சவரன் (8 கிராம்) ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • அங்கன்வாடி மையங்கள் அனைத்துக்கும் எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு, பிரஷர் குக்கர் ஆகிய உபகரணங்கள் வழங்கப்படும்.
  • நகர்ப்புறங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்தப்படும்
  • திருநங்கையர் மற்றும் திருநம்பியர் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
  • கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ், தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும்.
  • கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
  • 2016 முதல் 2021 வரையிலான 5 ஆண்டு காலத்தில் 40,000 கோடி அளவிற்கு பயிர்க் கடன் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
  • மானாவாரி பயிர் சாகுபடியில் கறவை மாடுகள், ஆடுகள் வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படும்.
  • தரிசு நிலங்கள் சீர்திருத்தப்பட்டு, நீராதார அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பயிர் செய்ய வழிவகை காணப்படும்
  • தோட்டக்கலை விவசாயிகளுக்கு அவர்களது விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.
  • அச்சு மற்றும் ஆரம் மாதிரி (hub and spoke model) தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை துறைகள் மூலம் திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 10 சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் விரிவாக்கப்படும். வாழை, இளநீர், மாம்பழம், திராட்சை மற்றும் காய்கறிகள் ஆகியவற்றிற்கென சிறப்பு வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்படும்.
  • சூரிய சக்தியால் இயங்கும் விவசாய மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 80 சதவீத மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
  • 10 எச்பி வரையிலான மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மானியம் வழங்கப்படும்.
  • விவசாயிகள் பயன் பெறும் வகையில் கிடங்குகள் மற்றும் குளிர் பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.
  • மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
  • விவசாயிகளுக்கு தொடர்ந்து கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்
  • டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஷேல் எரிவாயுத் திட்டம் போன்ற விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது.
  • விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்வது அனுமதிக்கப்படமாட்டாது.
  • விவசாயிகள் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யும் வகையில் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் கணினிமயமாக்கப்பட்டு மின்னணு ஏலமுறை (e-Tender) இணையதள வசதிகள் ஏற்படுத்தப்படும். விளைபொருட்களின் சந்தை விலை நிலவரம் குறித்த 'குறுஞ்செய்தி' சேவை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
  • நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.
  • கரும்புக்கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும்.
  • சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கொப்பரை விலை குறையும் போதெல்லாம் விவசாயிகளிடமிருந்து கொப்பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்; அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம் ஆகியவை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்
  • ஒவ்வொரு ஆண்டும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.
  • மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வு முறை தொடர்ந்து எதிர்க்கப்படும்.
  • முதியோர்களுக்கு அனைத்து மருத்துவக் கல்லூரி மருவத்துவமனை மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் மூப்பியல் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.
  • கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
  • ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வகையில் Amma Banking Card வழங்கப்படும் நிதிச் சேவையை உறுதிபடுத்தும் வகையிலும், அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்தும் வகையிலும், 1,000 ரூபாய் வரை சுலபத் தவணையில் செலுத்தக் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். வாரம் 10 ரூபாய் என்ற அளவிற்கு திருப்பிச் செலுத்தக்கூடிய அளவில் இந்தக் கடன் அமையும். Amma Banking Card-ஐ பயன்படுத்தி அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளை செய்வதோடு, அனைத்து கட்டணங்கள் செலுத்துதல் மற்றும் அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு பயன்படுத்தும் விதமாக இந்த Amma Banking Card சேவை வழங்கப்படும்.
  • அனைத்து அரசு சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும்.
  • இல்லந்தோறும் இணையம் என்னும் சேவை அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு செம்மைப்படுத்தப்படும்
  • அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு 'Set-top Box' விலையின்றி வழங்கப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom