Responsive Ad Slot

கொரோனாவுக்கான அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன் : ஆய்வில் தகவல்

No comments

Monday, 30 November 2020


கொரோனாவுக்கான அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தங்கள் மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பிக்கிறது.

அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு நாளைக்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர்.
அமெரிக்காவில் மாடர்னா நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை 30 ஆயிரம் பேருக்கு சோதனை செய்ததில், 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பித்துள்ளது.

மிருகத்தனமான, மனிதாபிமானமற்ற ஆட்சியை’ முடிவுக்கு கொண்டுவரப்படும் : அதிர்ந்து போன கம்யூனிஸ்ட் கட்சியினர்

No comments


கேரள உள்ளாட்சி தேர்தல் மிகவும் சூடுபிடித்து உள்ளது, பாஜக கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என மூன்று கட்சிகள் இடையே கேரள உள்ளாட்சி தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது, பல இடங்களில் பாஜக vs கம்யூனிஸ்ட் என போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பாஜக வேட்பாளர் தேர்வு மூலம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாரெல்லாம் கம்யூனிஸ்ட் ஆட்சியில் கேரளாவில் நேரடியாக பாதிக்க பட்டார்களோ அவர்களை வேட்பாளர்களாக களத்தில் நிறுத்தியுள்ளது, 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) குண்டால் கொடூரமாக தாக்கப்பட்ட ஜோத்ஸ்னா ஜோஸ், வரவிருக்கும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பலுசேரி பஞ்சாயத்துக்கு போட்டியிட பாஜக டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கூறுகையில், கேரளாவில் ‘மிருகத்தனமான, மனிதாபிமானமற்ற கம்யூனிச ஆட்சியை’ முடிவுக்கு கொண்டுவருவதற்காக பாஜக வேட்பாளராக ஜோத்ஸ்னா ஜோஸ் பலுசேரி பஞ்சாயத்திலிருந்து போட்டியிடுகிறார்.
பிப்ரவரி 2018 இல், ஜோத்ஸ்னா ஜோஸ் தம்பி என்ற சிபிஐ (எம்) தலைவரால் தாக்கப்பட்டார், இது அவரது குழந்தையை இழக்க வழிவகுத்தது. அந்த நேரத்தில் அவர் 4.5 மாத கர்ப்பமாக இருந்தார், ஆனால் தம்பி வயிற்றில் உதைத்த பின்னர் கர்ப்பத்தை கட்டாயமாக நிறுத்த வேண்டியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கோடெஞ்சேரி காவல்துறையினர் அந்த பெண்ணின் அயலவர்கள் உட்பட 7 பேரை கைது செய்ததாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் பொலிஸ் செயலற்ற தன்மை குறித்து ஜோத்ஸ்னா முன்பு புகார் செய்திருந்தார். “நான் காவல்துறையை அழைத்தேன், ஆனால் அவர்கள் வர ஒரு வாகனம் இல்லை என்று அவர்கள் சொன்னார்கள்”, என்று அவள் கேட்டாள்.

நிலத் தகராறு தொடர்பாக அவரது கணவரைத் தாக்க குண்டர்கள் வந்திருந்தனர். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து அவர்களது 5 வயது மகன் உட்பட குடும்பத்தினரை தாக்கினர். நில மோதலில் மத்தியஸ்தரான சைதலவி என்ற 8 பேர் கும்பலை வீட்டிற்குள் அழைத்துச் சென்ற சம்பவம் இரவு நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தாயால் அந்தப் பெண் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்கள் தன்னைத் தாக்கியதாகவும், தம்பியே தான் அவளை வயிற்றில் உதைத்ததாகவும் அவர் விவரித்தார்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, ​​அவரது நஞ்சுக்கொடியின் மீது இரத்த உறைவு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், இது குழந்தையின் இழப்புக்கு வழிவகுத்தது.
ஜோத்ஸ்னாவின் கணவர் கூறியதாவது, “நான் இரண்டு நிலையங்களில் அவர்களின் பெயர்களுடன் புகார்களைப் பதிவு செய்துள்ளேன். ஒரே ஒரு குற்றவாளியை மட்டுமே போலீசார் கைது செய்தனர். அந்த மனிதர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பகிரங்கமாக மிரட்டினார்கள். இப்போது, ​​சிபிஎம் தலைவர்கள் எனது புகாரில் இருந்து தம்பியை விலக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள், மற்றவர்களை கைது செய்ய ஏற்பாடு செய்வார்கள். ஆனால் எனது முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன், எனக்கு நீதி கிடைக்கும் வரை முன்னேறுவேன். ”

தமிழகத்தில் இன்று 1,410 பேருக்கு கொரோனா உறுதி

No comments


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (நவ.,30) 1,456 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7.59 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 1,410 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,81,915 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 220 ஆய்வகங்கள் (அரசு-67 மற்றும் தனியார்-153) மூலமாக, இன்று மட்டும் 62,616 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 20 லட்சத்து 60 ஆயிரத்து 001 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 872 பேர் ஆண்கள், 538 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,72,430 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,09,451 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 1,456 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 59 ஆயிரத்து 206 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 9 பேர் உயிரிழந்தனர். அதில், 3 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 6 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,712 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,997 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏழைகளும், மிகவும் வறுமை நிலையில் உள்ளோரும் அதிகாரம் பெற பணியாற்றியவர் மறைந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ

No comments


ஏழைகளும், மிகவும் வறுமை நிலையில் உள்ளோரும் அதிகாரம் பெற பணியாற்றியவர் என மறைந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.வுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி. மற்றும் ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதி எம்.எல்.ஏ.வான கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதற்காக, அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

பா.ஜ.க.வின் ராஜஸ்தான் பிரதேச மகளிர் அணி தலைவர், மகளிர் அணி தேசிய தலைவர், தேசிய பொது செயலாளர் உள்ளிட்ட பதவிகளை கிரண் மகேஸ்வரி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உதய்பூர்-ராஜ்சமந்த் தொகுதியின் எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.

பா.ஜ.க. தேசிய துணை தலைவராகவும் அவர் பதவி வகித்திருக்கிறார். கொரோனா தொற்றால் மரணம் அடைந்த கிரணுக்கு சத்ய நாராயண் என்ற கணவரும், ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கிரண் மகேஸ்வரிஜியின் திடீர் மறைவு அதிக வருத்தமளிக்கிறது.

ராஜஸ்தான் அரசில், எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ அல்லது கேபினட் அமைச்சராகவோ இருந்தபொழுது மாநில வளர்ச்சிக்கான பணிகளில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் வளர்ச்சி அடைய செய்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுகிறது : நீதிபதிகள் அதிருப்தி

No comments

மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் லஞ்சத்திற்கு சமூக நிலவரதைக் கவனித்து பல அதிரடியாக கருத்துகளைக் கூறி வருகிறது. அந்தவகையில் தற்போது, தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுகிறது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மக்களுக்குக் குறைந்த விலையில் மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக் என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிபத்கள், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தமிழக அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளின் ஊழல் செய்து சம்பாதித்த அவர்களின் மொத்தச் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? அவர்கள் தனியே சங்கம் தொடங்க அவர்களுக்கு யார் அதிகார்ம கொடுத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெரும் ஊழியர்கள் முறையாக தங்களின் பணியைச் செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளனர்.

குழப்பும் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி : ரசிகர்களுக்கு டாட்டா கட்டிய ரஜினி..!

No comments

அரசியலுக்கு வருவது உறுதி என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்த், பல சந்தர்ப்பங்களில் தனது நிலைப்பாடுகளை மாற்றினார். சில வாரங்களுக்கு முன் கொரோனா பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும், நடிகர் ரஜினி, அரசியல் கட்சி துவக்க மாட்டார் என, சமூக வலைதளங்களில், அவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த ரஜினி, 'அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள, சில தகவல்கள் உண்மையானவை' என, ஒப்புக் கொண்டார். இதனால், ரஜினி கட்சி துவக்குவாரா; மாட்டாரா என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.


இந்நிலையில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் 50 பேர் உடன் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ''மாவட்ட நிர்வாகிகள் அவர்களின் கருத்துக்களை சொன்னார்கள், நானும் எனது கருத்துக்களை சொன்னேன். எந்த முடிவு எடுத்தாலும் என்னுடன் இருப்பதாக சொன்னார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ என் முடிவை விரைவில் அறிவிப்பேன்'' என்றார்.

இன்றைக்கு ரஜினி முக்கிய முடிவை அறிவிப்பார் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் வழக்கம் போல், 'வரும் ஆனா வராது' என்கிற ஸ்டைலில் பதிலளித்து போய்விட்டார். இந்த கூட்டத்தில் பெரும்பாலும் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டே பெரிதும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஏனென்றால் ரஜினி செய்தியாளர்களிடம் பேசும்போது, ''நான் எடுக்கும் எந்த முடிவுக்கும் அவர்கள் ஆதரவு தருவதாக சொன்னார்கள்'' என்றார். அதே போன்று செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகி ஒருவரும் அதே கருத்தை கூறினார். மேலும் அவர் பேசும்போது தலைவரின் உடல்நிலை முக்கியம் என்கிற ரீதியிலும் பேசினார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அவர் அரசியலுக்கு வருவது சந்தேகமே என பலரும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் ரஜினி இன்னும் கட்சியே துவங்கவில்லை. அதன்பின் அவர் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து, அதுவும் இந்த கொரோனா காலத்தில் அவர் களப்பணியில் ஈடுபடுவது எல்லாம் அவரது உடல்நிலைக்கு செட் ஆகாது என்கின்றனர்.

மற்றொருபுறம் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என நம்பிக்கையையும் வைத்து சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது. இதனால் ட்விட்டரில் இரண்டாவது நாளாக ரஜினி டிரெண்ட் ஆகி வருகிறார்.

விவசாயிகளின் நலனுக்காகவே புதிய வேளாண் சட்டங்கள் : பிரதமர் மோடி

No comments


விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும், இதன் நன்மைகளை வரும் நாட்களில் காணலாம் என்றும் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று (நவ.,30) தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், ஹாண்டியா - ராஜதலாப் இடையே ரூ.2,447 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 6 வழிச்சாலையை திறந்து வைத்து மோடி பேசியதாவது: வாரணாசியில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து செயல்படுத்தாத, புதிய நெடுஞ்சாலைகள், பாலங்கள். போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க சாலைகளை அகலப்படுத்துதல் போன்றவைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வராக ஆனதிலிருந்து, உத்தரபிரதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு அடைந்துள்ளது. மாநிலத்தில் 12 விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய உள்கட்டமைப்புகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. வாரணாசியில் சரக்கு மையத்தை நிறுவுவதன் மூலம், இங்குள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எளிதாக சேமித்து விற்க வசதி கிடைத்துள்ளது.

இந்த சேமிப்பு திறன் காரணமாக, முதல்முறையாக, இங்குள்ள விவசாயிகளின் விளைபொருள்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் சட்டப் பாதுகாப்பையும் அளித்துள்ளன. விவசாயிகளின் நலனுக்காக சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன, இது அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கும். ஒரு விவசாயி தனது விளைபொருட்களை சிறந்த விலையையும் வசதிகளையும் கொடுப்பவர்களுக்கு நேரடியாக விற்க சுதந்திரம் பெற வேண்டாமா?

சுவாமிநாதன் கமிஷனின் படி விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு அதிகமான எம்.எஸ்.பி வழங்குவதற்கான வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்குறுதி காகிதத்தில் நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல், விவசாயிகளின் வங்கிக் கணக்கையும் எட்டியுள்ளது. முன்பெல்லாம் அரசின் முடிவுகள் எதிர்க்கப்பட்டன. ஆனால் இப்போது வதந்திகள் எதிர்ப்பிற்கு அடிப்படையாகிவிட்டன. விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய சட்டங்களின் நன்மைகளை நாம் வரும் நாட்களில் காண்போம், அனுபவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

வங்கக் கடலில் புதிய புயல் இன்று உருவாக உள்ளது : தூத்துக்குடியில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

No comments


வங்கக் கடலில் புதிய புயல் இன்று உருவாக உள்ளதை தொடர்ந்து, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது.

அது நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில், நாளை மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும்.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் வரும் 3-ம் தேதி முதல் கனமழை பெய்யும். மீனவர்கள் யாரும் வரும் 4-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் அனைத்து கடலோர கிராமங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400 விசைப்படகுகள் மற்றும் 3000 நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.

இதேநேரத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளத்தை சேர்ந்த 46 விசைப்படகுகள் கரை திரும்பாமல் இருந்தன. புயல் எச்சரிக்கை தொடர்பாக அந்த படகுகளுக்கு சேட்டிலைட் போன் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து 20 படகுகள் இன்று காலை கரை திரும்பிவிட்டன. இன்னும் 26 படகுகள் மட்டும் கடலில் உள்ளனர். அவர்களுக்கும் தகவல்கள் போய் சேர்ந்துவிட்டன. நாளை காலைக்குள் அந்த படகுகளும் கரை திரும்பிவிடும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே வங்கக்கடலில் புதிய புயல் உருவாகவுள்ளதை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் புயல் மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

No comments


தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாவட்ட வாரியமாக அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வருகிறது. அதிமுக, திமுக, பாஜக என்று அனைவரும் களப்பணியில் இறங்கிவிட்டனர்.

இந்நிலையில், தொகுதி பேரம் படியாதது, ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு போன்ற காரணங்களால், தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மக்கள் நீதி மையம், அ.ம.மு.க., ஆகிய கட்சிகளுடன் இணைந்து 3வது அணி அமைப்பது குறித்து ரகசிய பேச்சு நடத்தப்படுவதாக தமிழக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பீகார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி காரணமாக, அம்மாநிலத்தில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இதே போன்ற நிலைமை தமிழ்நாட்டிற்கும் வரும் என்று திமுக கருதுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளை கேட்பதாக தெரிகிறது. இவ்வளவு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு, அதிமுகவிடம் தோல்வி அடைந்தால், ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகி விடுமோ என்ற அச்சம் திமுக தலைமைக்கு ரகசிய சர்வேயில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே காங்கிரசுக்கு குறைந்தபட்சம் 15 முதல் 20 தொகுதிகளை மட்டும் ஒதுக்கீடு செய்வதற்கு திமுக முடிவு செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 38 முதல் 40 தொகுதிகளை வாங்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. மேலும், ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஆளுநரிடம், தி.மு.க., கோரிக்கை கடிதம் வழங்கியது. இது, காங்கிரசார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும் ஒடிசா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான செல்லக்குமார் எம்.பி., அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில், தற்போது வைரலாகி பரவி வருகிறது.

ராஜீவ் கொலையில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று அவர் கடுமையான வார்த்தையில் பேசியுள்ளார். இது திமுகவிற்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறலாம் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது.

இதனால் காங்கிரஸ் கட்சி 3வது அணியை அமைக்கும் முயற்சியில் உள்ளது. நடிகர் கமலின் மக்கள் நீதி மையம், தினகரனின் அ.ம.மு.க., மற்றும் பல சிறிய கட்சிகளை சேர்த்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததாகவும், அதற்கான வேலைகளில் தற்போது காங்கிரஸ் இறங்கி விட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

அராஜகத்திற்கு மொத்த உருவமே திமுக : அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்

No comments


மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று இயக்குநர் முடிவுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ;- ரஜினிகாந்த் நடத்தும் ஆலோசனை கூட்டத்தால் அரசியல் மாற்றம் எதுவும் நடக்காது.  வழக்கமாக தமது ரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினியின் வழக்கம்தான். ரஜினி தமது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதில் சிறப்பம்சம் ஒன்றும் இல்லை. ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் விருப்பத்தை பொறுத்தது; நான் கருத்து சொல்ல முடியாது.

அதிமுக  மாற்றத்துக்கு உள்ளாகும் கட்சி அல்ல, ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்டுக்கோப்பான கட்சி, என்றைக்கும் கட்டுக்கோப்பாக இருக்கும். எப்போதும் கட்டுக்கோப்பாக தான் உள்ளோம். தினகரன் வைத்திருப்பது தனி அமைப்பு, அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. சசிகலா வெளியே வந்தாலும் எந்தவிதமான மாற்றமும் அதிமுகவில் இருக்காது என தெரிவித்தார்.

மேலும், கொரோனா அச்சத்தால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்னும் முழுமையாக தளர்த்தப்படவில்லை, அரசியல் கூட்டங்களுக்கு இன்னும் இந்தியா முழுவதும் தடை உள்ளது. அப்படித் தடை உள்ள நிலையில் திமுக பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது அரசியல் ஆதாயத்திற்காக தான். அரசியல் அராஜகத்திற்கு மொத்த உருவமே திமுக தான் என விமர்சனம் செய்தார். நடிகர் விஜய்யின் நடித்துள்ள மாஸ்டர் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அதனை திரையரங்குகளில் வெளியிடுவோம் என்று முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.

எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூறுகிறேன் - ரஜினி

No comments

அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும், சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நடிகர் ரஜினிகாந்த், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்காக, சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து ரஜினி புறப்பட்டபோது, அங்கிருந்த ரசிகர்கள் அவரது காரின் மீது பூத்தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து காரில் கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்ற ரஜினியை அங்கும் ரசிகர்கள் திரண்டு, பூத்தூவி வரவேற்றனர்.

மேலும் அரசியல் கட்சி துவங்குமாறு கூறி அவர்கள் முழக்கமிட்டனர். மண்டபத்திற்குள் சென்ற பிறகு காரில் இருந்து இறங்கி ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு ஆலோசனை நடைபெறும் அரங்கிற்கு ரஜினி சென்றார்.

ஆலோசனைக் கூட்டத்தில் 38 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ரஜினி ரசிகர்கள், மக்கள் மன்றத்தை சேர்ந்த பலர் அங்கு வந்திருந்தபோதும், அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே உள்ளே அனுப்பப்பட்டனர். பவுன்சர்களும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

ரஜினி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி தொடங்குவது, சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு, தேர்தலில் போட்டியிட்டால் கிடைக்கக்கூடிய வாக்கு சதவீதம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

ரஜினி தனது முடிவை நாளை காலைக்குள் அறிவிக்க உள்ளதாகவும், கட்சி தொடங்குவது குறித்தே கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், ஆலோசனையில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்து, மண்டபத்தின் மாடத்தில் இருந்து ரசிகர்களை பார்த்து உற்சாகம் பொங்க மகிழ்ச்சியோடு ரஜினிகாந்த் கையசைத்தார்.

பின்னர் போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், அரசியல் கட்சி துவங்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை கூறியதாகக் குறிப்பிட்டார்.

தான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர் என்றும், தனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பதாகவும் ரஜினி தெரிவித்தார்.

பெரும்பான்மையை நிரூபிக்கும்படி மம்தா பானர்ஜியிடம் ஆளுநர் கேட்க வாய்ப்பு உள்ளது : பாஜக எம்.பி. சவுமித்ர கான்

No comments

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மேற்கு வங்க ஆளுநர் கேட்க வாய்ப்புள்ளதாக பாஜக எம்.பி. சவுமித்ர கான் தெரிவித்துள்ளார்.

கடந்த பல மாதங்களாக, மேற்கு வங்க ஆளுநர் தங்கருக்கும் மம்தாவுக்கும் உரசல் போக்கு இருந்து வருகிறது. தனது மாநிலத்தில் ஒரு இணை நிர்வாகத்தை நடத்துவதாக ஆளுநர் மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் , திரிணமூல் காங்கிரஸ் மொத்தம் 211 இடங்களை வென்றது. அத்தேர்தலில் பாஜக மூன்று எம்எல்ஏக்களை மட்டுமே பெற முடிந்தது. எனினும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 18 நாடாளுமன்றத் தொகுதிகளை மேற்கு வங்கத்தில் வென்றது. அதன் பிறகு அங்கு கட்சியைப் பலப்படுத்த பாஜக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

2021ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் (டி.எம்.சி) கட்சியைச் சேர்ந்த பல முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களும் பாஜகவில் இணைந்தனர்.

அமைச்சர் ராஜினாமா

கடந்த வாரம் மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். கட்சியில் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், சுவேந்து அதிகாரி திரிணமூல் கட்சியில் இருந்தும் விலக உள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் சுவேந்துவை பாஜகவில் வந்து இணையும்படியும் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் சுவேந்துவின் ஆதரவு எம்எல்ஏக்களின் நிலைப்பாடும் அவரின் நிலைப்பாட்டைப் பொறுத்து அமையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. சவுமித்ர கான், ''மம்தாவின் கட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். அவரது கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களும் விலகி வருகின்றனர். அதில் முக்கியமானது அமைச்சர் சுவேந்துவின் ராஜினாமா. கூடிய விரைவில் மாநிலச் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் ஆளுநர் ஜகதீப் தங்கர் கேட்க வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தார்.

சவுமித்ர கானும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி புதிய கட்சி? மாலை அல்லது காலை அறிவிப்பு

No comments

மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ரஜினி நடத்திய ஆலோசனை நிறைவு

புதிய கட்சி துவங்குவது தொடர்பாக ரஜினி நடத்திய ஆலோசனை நிறைவு

புதிய கட்சி துவங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் ரஜினி கருத்துகளை கேட்டறிந்தார்

மாவட்டச் செயலாளர்களை ரஜினி தனித்தனியாகவும் அழைத்து பேசியுள்ளார்

ரஜினி அரசியல் கட்சி துவங்கி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாக தகவல்

கட்சி தொடங்குவது குறித்து தான் முடிவெடுப்பதாகவும், நிர்வாகிகள் கொடுத்த பணிகளை முழுமையாக செயல்படுத்தவும் ரஜினி அறிவுறுத்தல்

புதிய கட்சி துவங்குவது தொடர்பாக தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - மாவட்ட நிர்வாகி

அரசியல் கட்சி துவங்குவது, அரசியலுக்கு ரஜினி வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து விவாதம் நடைபெற்றது - மாவட்ட நிர்வாகி

ரஜினியின் தற்போதைய உடல் நிலை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது - மாவட்ட நிர்வாகி

ரஜினி உடனடியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினோம் - மாவட்ட நிர்வாகி

புதிய கட்சி ஆரம்பிப்பது, அரசியலுக்கு வருவது குறித்து இன்று மாலை அல்லது நாளை காலை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு - மாவட்ட நிர்வாகி

புதிய கட்சி துவங்குவது, அரசியல் வருகை குறித்து ரஜினியே இன்று மாலை அல்லது நாளை காலை அறிவிப்பார் - மாவட்ட நிர்வாகி

விரைவாக முடிவை தெரிவிக்குமாறு அழகிரி கெடு விதித்துள்ளார் : திமுக அதிர்ச்சி

No comments


மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்வது தொடர்பான ஆலோசனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவாக முடிவை தெரிவிக்குமாறு அழகிரி கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி கலைஞர் மரணத்திற்கு பிறகு மீண்டும் அரசியல் களம்புக திட்டமிட்டார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு திமுக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அழகிரியால் திமுகவில் பதவி பெற்றவர்கள், உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் கூட அவரை கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட அரசியல் துறவரம் பெற்ற நபர் போல் அழகிரி ஒதுங்கியிருந்தார். அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று அத்தி பூத்தாற்போல் அரசியல் பேசி வந்தார்.

இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய அழகிரியை பாஜக தரப்பு அணுகியது. ஆனால் அழகிரி அதனை ஏற்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மறுபடியும் அழகிரியை சுற்றி அரசியல் கணக்குகள் ஆரம்பித்துள்ளனர். மு.க.அழகிரி நடிகர் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நண்பவர். எனவே ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் இணையவே அழகிரி காத்திருப்பதாக தகவல் வெளியாகின. ரஜினி கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் அழகிரிக்கு அந்த கட்சியில் முக்கிய பொறுப்பு இருக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் விஷயத்தில் ஆர்வம் காட்டாத நிலையில் பாஜக தரப்பு மறுபடியும் அழகிரியை அணுகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொடைக்கானல் வைத்து பாஜக முக்கிய புள்ளி ஒருவர் அழகிரியை சந்தித்து பேசினார். அப்போது பாஜகவிற்கு வந்தால் மீண்டும் மத்திய அமைச்சர் ஆக்குவதாக அழகிரிக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறுபடியும் தனது அரசியல் நடவடிக்கை குறித்து அழகிரி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் அழகிரி பாஜகவில் இணைந்து மத்திய அமைச்சராகிவிட்டால் திமுகவிற்கு நெருக்கடி ஏற்படும் என்று அக்கட்சி தலைமை யோசித்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்காக அழகிரி பிரச்சாரம் செய்யும் பட்சத்தில் அவருக்கு பதில் அளிக்க வேண்டிய நெருக்கடியும் திமுகவிற்கு ஏற்படும். அதோடு மட்டும் அல்லாமல் திமுக உயர்மட்ட நிர்வாகிகள் தொடங்கி வேட்பாளர்கள் வரை அனைவர் குறித்தும் அடி முதல் நாதம் வரை அழகிரி அறிந்தவர். எனவே திமுகவின் தேர்தல் வியூகங்கள் பாஜகவிற்கு அப்படியே கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. 

இதனை எல்லாம் கருத்தில் கொண்டே அழகிரியை திமுக தலைமை சார்பில் முக்கிய நபர் ஒருவர் அணுகியதாக சொல்கிறார்கள். பாஜகவில் இணைய வேண்டாம் மறுபடியும் திமுகவில் சேர்த்துக் கொள்கிறோம் என்று அழகிரியிடம் திமுக தலைமை சார்பில் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்தே கடந்த வாரம் நடைபெற்ற திமுக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அழகிரியை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொள்வது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.

இந்த விஷயத்தில் யாரும் வெளிப்படையாக பேசாத நிலையிலும் தென் மாவட்ட நிர்வாகிகள் மட்டும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரு வேளை அழகிரி மறுபடியும் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டால் தென்மாவட்டங்களில் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால்  அவசரம் காட்ட வேண்டாம் என்று மட்டும் திமுக தலைமை தற்போதைக்கு முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அதே சமயம் மு.க.அழகிரிக்கு எம்பி பதவி என்பதை தாண்டி கட்சியில் எந்த பொறுப்பையும் வழங்க ஸ்டாலின் தயாராக இல்லை என்றும் சொல்கிறார்கள்.

இதனால் அழகிரி மீண்டும் திமுகவில் இணைவது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் பாஜக தரப்பில் இருந்து அழகிரிக்கான ஆஃபர் அப்படியே உள்ளது. ஓகே சொன்னால் அடுத்த பிளைட்டில் டெல்லி சென்று மோடி, அமித் ஷா, நட்டாவை சந்தித்துவிட்டு வந்துவிடலாம் என்று அழகிரிக்க தூண்டில் போட்டு வைத்துள்ளார் தமிழக பெரும்புள்ளி ஒருவர். இதனால் திமுக தலைமை எடுக்க உள்ள முடிவை வேகமாக எடுத்து தெரிவிக்குமாறு அழகிரி தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்திய திமுக புள்ளியிடம் திட்டவட்டமாக கூறியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,772 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி

No comments


இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 94 லட்சத்தைக் கடந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 88.50 லட்சத்தை நெருங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 772 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 94 லட்சத்து 31 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் 7-வது முறையாக கொரோனாவைரஸ் பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இதில் ஆறுதல் தரும் வகையில் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 88 லட்சத்து 47 ஆயிரத்து 600 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 46 ஆயிரத்து 952 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.74 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 20-வது நாளாக, கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 443 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் உயிரிழப்பு 1.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக டெல்லியில் 68 பேரும், மகாராஷ்டிராவில் 85 பேரும், மேற்கு வங்கத்தில் 54 பேரும், உ.பி.யில் 24 பேரும், கேரளாவில் 27 பேரும், ஹரியாணாவில் 26 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 14 கோடியே 3 லட்சத்து 79 ஆயிரத்து 976 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 8 லட்சத்து 76 ஆயிரத்து 173 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கொரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் கடந்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு - முதல்வர் வாழும் காமராஜர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

No comments

தமிழத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிச.31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் வாழும் காமராஜர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், நோய்த் தொற்று விகிதம் 6.55 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,600 நபர்களுக்கு கீழாகவே உள்ளது.

சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000ல் இருந்து தற்போது 11,000 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.
தமிழ்நாட்டில் 30.11.2020 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 28.11.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய் பரவல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 30.11.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸுக்குள் முரண்பாடு: பிரதமர் மோடியைப் புகழ்ந்த ஆனந்த் சர்மா: விமர்சித்த ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

No comments

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் இருக்கும் மருந்து நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி நேரடியாகச் சென்று ஆய்வு நடத்திய சம்பவத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஆனந்த் சர்மா புகழ்ந்துள்ளார். ஆனால், அதேசமயம், அந்தக் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் பயோடெக் பார்க், புனேயில் உள்ள சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

இந்த மருந்து நிறுவனங்களுக்கு சனிக்கிழமை நேரடியாகச் சென்ற பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு மருந்தின் ஆய்வுப்பணி, தயாரிப்பு, பரிசோதனை நிலவரம் ஆகியவை குறி்த்து கேட்டறிந்தார். மருத்துவ விஞ்ஞானிகள், நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் கொரோனா தடுப்பு மருந்தின் ஆராய்ச்சி நிலவரம் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்தார்.

பிரதமர் மோடியின் இந்த செயலை காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஆனந்த் சர்மா புகழ்ந்துள்ளார். ஆனால், காங்கிரஸ்கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா , விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் வேளையில் பிரதமர் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிபர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆனந்த் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், ஜைடஸ் பயோடெக் பார்க், சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி நேரடியாகச் சென்றதன் மூலம் இந்திய ஆய்வாளர்களுக்கும், அவர்களின் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிக்கும் அங்கீகாரம் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பும் நிறுவனங்களுக்கு அங்கீகாரத்தையும், மதிப்பையும் பிரதமர் மோடியின் வருகை அளித்துள்ளது. உலகிலேயே தடுப்பு மருந்து தயாரிப்பதில் மிகப்பெரிய உற்பத்தியாளர் என்பதை பல ஆண்டுகளாக இந்தியா கட்டமைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்களத்தில் போராடி வரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தேசத்துக்கும் பிரதமர் மோடியின் வருகை புதிய நம்பிக்கையைத் தரும்.

கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைக்கு வந்தபின், திறன்வாய்ந்த, தகுதியான தளத்தின் மூலம் அனைவருக்கும் கிடைக்க பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகள் என்ற போர்வையில் சில கட்சிகள் போராட்டம் : வானதி சீனிவாசன் குற்றம்சாட்டு

No comments

அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகள் என்ற போர்வையில் சில கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நிவர் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நொச்சிக்குப்பம், சைதாப்பேட்டை ஆரோக்கிய மாதா நகர் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் உள்ளிட்ட சுமார் 1,000 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்களை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நிவர் புயல் பாதிப்புகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய முன்னேற்பாடுகளை செய்திருந்தன, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகளை செய்து வருகின்றன. பாஜக மகளிர் அணி சார்பில் சுமார் 1,000 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கி உள்ளோம்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை தமிழக அரசியல் களத்தில் பாஜகவுக்கு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல் யாத்திரைக்கு திரளும் மக்கள் கூட்டமே அதை உறுதிப்படுத்துகிறது.

ஆசை காட்டி மதம் மாற்றும் உள்நோக்கத்துடன் ஏமாற்றி நடைபெறும் திருமணங்களை தடுக்கவே உத்தர பிரதேச பாஜக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற திருமணங்கள் நடப்பதாக கேரள உயர் நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி 1996-ம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. 1996-ல் தனித்துப் போட்டியிட்டு பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக வென்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. கடந்த 2016 தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. கோவை தெற்கு தொகுதியில் நான் 22 சதவீத வாக்குகள் பெற்றேன்.

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் முறை தொடரும் என்று அறிவித்த பிறகும்கூட, அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகள் என்ற போர்வையில் சில கட்சிகள் போராடி வருகின்றன. விவசாயிகளின் நலனுக்கு எதிராக பாஜக அரசு ஒருபோதும் செயல்படாது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்கள் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இவ்வாறு அவர் கூறினார்.

கட்சி துவங்குவது குறித்து, மன்ற நிர்வாகிகளுடன், நடிகர் ரஜினி இன்று(நவ.,30) ஆலோசனை நடத்துகிறார்

No comments


கொரோனா பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும், நடிகர் ரஜினி, அரசியல் கட்சி துவக்க மாட்டார் என, சமூக வலைதளங்களில், அவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த ரஜினி, 'அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள, சில தகவல்கள் உண்மையானவை' என, ஒப்புக் கொண்டார்.

இதனால், ரஜினி கட்சி துவக்குவாரா; மாட்டாரா என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக, 'அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து, முடிவை அறிவிப்பேன்' என, 'டுவிட்டர்' வாயிலாக, ரஜினி தெரிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன், ரஜினி இன்று ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து, 234 சட்டசபை தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்தவும், அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் கூறியதாவது: தன் பெயரில் வெளியான கடிதத்தை தொடர்ந்து, அரசியல் பேசுகிற முக்கிய பிரமுகர்களை சந்திப்பதையும், அவர்களிடம் அரசியல் குறித்து பேசுவதையும், ரஜினி தவிர்த்து விட்டார். சமீபத்தில், மத்திய உள்துறை மத்திய அமைச்சர் அமித்ஷாவின், சென்னை பயணத்தை ஒட்டி, ரஜினியை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசினார். ஆனாலும், அமித்ஷா - ரஜினி சந்திப்பு நடைபெறவில்லை.

இந்தச் சூழ்நிலையில், பா.ஜ.,வுடனான கூட்டணி நீடிப்பதாக, அ.தி.மு.க, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், 'ஆள்பவர்கள் முதல் ஆள நினைப்பவர்கள் வரை கண்டு அஞ்சும், அரசியல் ஞானி ரஜினி' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள், தி.மு.க., அலுவலகமான, சென்னை அறிவாலயம் முன், ரசிகர்களால் நேற்று ஒட்டப்பட்டன.

'வரும் சட்டசபை தேர்தலில், ரஜினி கட்சி துவக்கி, போட்டியிட வேண்டும்' என, போஸ்டர்கள் மற்றும் சமூக வலைதங்கள், கடிதங்கள் வாயிலாகவும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, கட்சி துவங்கி, தனித்து போட்டியிடுவாரா; பா.ஜ.,வுடன் கூட்டணி அல்லது தன் நீண்ட கால நண்பரான கமலின், மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

இதனால், ரஜினி உறுதியான முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நல்ல முடிவை எடுக்கவே, இன்று நிர்வாகிகளுடன், அவர் ஆலோசனை நடத்துகிறார்.ரஜினியை, அவ்வளவு சீக்கிரமாக, யாராலும் எளிதாக புரிந்து கொள்ள முடியாது என்பது, அவருக்கு நெருக்கமானர்களுக்கு தெரிந்த விஷயம். எனவே, அவரது முடிவு, யாரும் எதிர்பாராத வகையில், அதிசயமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.

ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது, தேசிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி துவக்க முடிவெடுத்தால், 234 தொகுதிகளுக்கும், வேனில் ரத யாத்திரை செல்லவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

அரசியல் கட்சிகளில் ஜாதி மதத்தை விட திறமை தான் ஒருவருக்கு முக்கியம் : நிதின் கட்கரி

No comments


 ''அரசியல் கட்சிகளில் ஜாதி பிரிவுகள் இருப்பதால் எந்த பயனும் இல்லை'' என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சரும் பா.ஜ.க மூத்த தலைவருமான நிதின் கட்கரி கூறினார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நிதின் கட்கரி கூறியதாவது:அரசியல் கட்சிகளில் ஜாதி மதம் உட்பட எந்த அடிப்படையிலும் பிரிவுகள் துவக்கப்படுவதை ஆதரிக்க மாட்டேன். ஜாதி மதத்தை விட திறமை தான் ஒருவருக்கு முக்கியம்.

பா.ஜ.கவில் ஜாதி மத பிரிவுகள் உள்ளன. ஆனால் பா.ஜ.கவில் இந்த பிரிவுகளுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. திறமையும் உழைக்கும் திறனும் உள்ளவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கட்சியில் பொறுப்பும் முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசியை உடனடியாக பயன்படுத்துவதற்காக அனுமதி பெற, இரண்டு வாரங்களில் விண்ணப்பிக்க உள்ளோம்

No comments


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி மருந்தின் பரிசோதனைகள், இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. நம் நாட்டில், இந்த தடுப்பூசியை தயாரிக்கும் உரிமத்தை, சீரம் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், சீரம் நிறுவன தலைவர் அதார் பூனவல்லா நேற்று கூறியதாவது:

மத்திய அரசு, அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள், 30 - 40 கோடி, 'டோஸ்'கள், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை, கொள்முதல் செய்யும் என எதிர்பார்க்கிறோம். இதற்கிடையே, தடுப்பூசியை உடனடியாக பயன்படுத்துவதற்காக, அனுமதி பெற, இரண்டு வாரங்களில் விண்ணப்பிக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

உங்களுடைய இந்த நாள் எப்படி இருக்கும்? 12 ராசி பலன்கள்

No comments

மேஷம்

மேஷம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். ஆடை ஆபரணம் சேரும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மனநிறைவு கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் சுட்சமங்களை சொல்லி தருவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: வீரியத்தை விட காரியம் பெரிது என்பதை உணர்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் உங்கள் வேலைகளை சுறுசுறுப்பாக முடித்து காட்டுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

கன்னி

கன்னி:  உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராற்றில் போய் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு

தனுசு:  குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். பயணங்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.அமோகமான நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உயர்வு பெறும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.

தங்கம் விலை கடந்த 20 நாட்களில் பவுனுக்கு ரூ.2,789 குறைந்தது

No comments


தமிழகத்தில் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை கடந்து வரலாற்று சாதனை படைத்தது. இது பெண்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொடுமோ? என்று கருதிய வேளையில், கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அதன் பின்னர் தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் சற்று சரிவு காணப்படுகிறது. சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.348-ம், பவுனுக்கு ரூ.2,789-ம் விலை குறைந்துள்ளது. அதாவது, கடந்த 9-ந் தேதி அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,922-க்கும், பவுன் ரூ.39,376-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4,574-க்கும், பவுன் ரூ.36,592-க்கும் விற்பனையானது.

தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் கடந்த 20-ந் தேதி வெள்ளி ஒரு கிராம் 66 ரூபாய் 80 காசுக்கும், கிலோ ரூ.66 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. அந்த வகையில் வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் 10 காசும், கிலோவுக்கு ரூ.2,100-ம் விலை குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி வெள்ளி ஒரு கிராம் 64 ரூபாய் 70 காசுக்கும், கிலோ ரூ.64 ஆயிரத்து 700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை பட்டியலில் குறைவு காணப்பட்டாலும் செய்கூலி, சேதாரம் எல்லாம் சேர்த்தால், விலை எகிறி விடுகிறது என்பது பொதுமக்களின் மனகுமுறலாக இருக்கிறது.

தடுப்பூசி உருவாக்கும் 3 குழுவினருடன் மோடி காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாட உள்ளார்

No comments


இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது. 

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்தில் கூடுதல் அக்கறை காட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவர் ஆமதாபாத், ஐதராபாத், புனே நகரங்களுக்கு சென்று அங்கு தடுப்பூசி உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள 3 நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிற மேலும் 3 நிறுவனங்களான ஜெனோவோ பயோபார்மா, பயாலஜிக்கல் இ, டாக்டர் ரெட்டிஸ் ஆகியவற்றின் குழுவினருடன் இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி வழியாக கலந்துரையாட உள்ளதாக பிரதமர் அலுவலக டுவிட்டர் பதிவு தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், தனக்கு கீழுள்ள நிலங்கள் குறித்த வெள்ளை அறிக்கை

No comments


திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிலங்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் நன்கொடைக்கான பதிவேட்டில் குறித்து வைக்கப்பட்டுஉள்ளன.ஆயினும், தேவஸ்தானத்திடம் உள்ள நிலங்களை பலர் ஆக்கிரமித்து, கையகப்படுத்தியும்உள்ளனர்.

இதையடுத்து, தேவஸ்தானம், 1974 முதல், தற்போது வரை, தன்னிடம் உள்ள நிலங்களின்
பட்டியலை பதிவேட்டின்படி, 'சர்வே' செய்து, வெள்ளை அறிக்கையை தயாரித்து உள்ளது.
அந்த அறிக்கையை நேற்று முன்தினம் நடந்த அறங்காவலர் குழுவின் ஒப்புதல் பெற்று, தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

அதில் உள்ள விபரங்களின் படி, தேவஸ்தானத்திடம் உள்ள நிலங்கள் 1,128, அதன் மொத்த
பரப்பளவு, 8,088 ஏக்கர், 89 சென்ட். அதில், 233 விவசாய நிலங்கள் உள்ளன; அவற்றின் பரப்பளவு, 2,085 ஏக்கர், 41 சென்ட்.ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டு, மீண்டும் கையகப்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 'இந்த வெள்ளை அறிக்கையை, பக்தர்கள், www.tirumala.org என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்' என, தேவஸ்தானம்தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார்

No comments


பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு தேவ் தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று (திங்கட்கிழமை) செல்கிறார். இதனால் வாரணாசியில் பல்வேறுவித அலங்காரங்களும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வாரணாசிக்கு 9 மாத கால இடைவெளிக்குப் பின் மோடி செல்கிறார். தேவ் தீபாவளி பண்டிகையில் அவர் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. இன்று பிற்பகல் 2 மணிக்கு வாரணாசியை அடையும் மோடி, அங்கு பல முக்கிய திட்டங்களை தொடங்கிவைக்கிறார், அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ராஜா தலாப் பகுதியில் இருந்து பிரயாக்ராஜ் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை ஆறுவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

வாரணாசி கங்கை நதிக்கரையில் தீபங்களை ஏற்றிவைக்கும் அவர், ஒரு சிறு பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். தொடர்ந்து கங்கை நதியில் படகுப் பயணம் மேற்கொள்ளும் மோடி, காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபடுகிறார். சாரநாத்தில் நடைபெறும் ஒளி, ஒலி காட்சியையும் அவர் பார்க்கிறார்.

பிரதமர் மோடியுடன் தேவ் தீபாவளி பண்டிகையில் உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேலும், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்கிறார்கள். இரவு 9 மணிக்கு மோடி டெல்லி திரும்புவார்.

சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு பைடன் நிர்வாகம் முழு ஆதரவை அளிக்கும் : அமெரிக்க எம்.பி

No comments


‛சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு பைடன் நிர்வாகம் முழு ஆதரவை அளிக்கும்' என்று அமெரிக்க எம்.பியான, இந்தியாவை பூர்வீகமாக உடைய ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. எல்லையில், ஆறு மாதங்களுக்கு மேலாக, இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.கட்டுமானப் பணிபல சுற்று பேச்சு நடத்தியும், படைகளை திரும்பப் பெறுவதில் என்ற உடன்பாடும் ஏற்படவில்லை.இந்நிலையில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், பல கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து, சமீபத்தில் நடந்த தேர்தலில் மூன்றாவது முறையாக, பிரதிநிதிகள் சபைக்கு, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளதாவது:எல்லையில் சீனா பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, செயற்கைக்கோள் படங்கள் பல வெளியாகி உள்ளன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவை துாண்டிவிடும் நோக்கத்தில் சீனா செயல்படுவது உறுதியாகிறது.

தென் சீன கடல் பகுதிகளில், பல புதிய தீவுகளை சீனா உருவாக்கியுள்ளது. அந்த பிராந்தியத்தில் ஏற்கனவே இருந்த நிலைமையை சீனா மாற்றியுள்ளது.அது போன்ற முயற்சியைத்தான், இந்திய எல்லையிலும் சீனா மேற்கொண்டு வருகிறது.முழு ஆதரவுஇந்த விவகாரம் உட்பட, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு எப்போதும் அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் போல், அதிபராக பதவியேற்க உள்ள, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, ஜோ பைடன் நிர்வாகமும், இந்தியாவுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும்.

அதனால்தான், ஜோ பைடன் நிர்வாகத்தில், இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்க உள்ள, ஆன்டனி பிளென்கினும், இந்தியாவின் நீண்டகால நண்பர். ஜோ பைடன், கமலா ஹாரிஸ், பிளென்கின் ஆகியோர் இந்தியா ஆதரவு கொள்கை உள்ளவர்கள். அதனால், சீனாவுக்கு எதிரான பிரச்னையில், இந்தியாவுக்கு முழு ஆதரவை, புதிய நிர்வாகம் அளிக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

வட இந்தியாவில் இந்த ஆண்டு குளிர்காலம் மோசமானதாக இருக்கும் : இந்திய வானிலை மையம்

No comments


வட இந்தியாவில் இந்த ஆண்டு குளிர்காலம் மோசமானதாக இருக்கும், வெப்பநிலை குறைந்தபட்ச அளவை விட மிகவும் கீழிறங்கும் என இந்திய வானிலை மைய இயக்குனர் எச்சரித்துள்ளார்.

வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த சமயத்தில் திடீரென குறையும் வெப்பநிலை காரணமாக ஆண்டு தோறும் பல முதியவர்கள் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலம் எவ்வாறு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வட இந்தியாவில் இரவு வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும், பகலில் வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இது பற்றி இந்திய வானிலை மைய இயக்குனர் மிருதுஞ்சய் மோகபத்ரா கூறியதாவது: இந்த பருவத்தில் வட இந்தியாவில் குளிர்காலம் கடுமையாக இருக்கும். குளிர் அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேற்கு கடலோரம் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வெப்பநிலை குறைந்தபட்ச அளவை விட அதிகமாக இருக்கும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வடக்கு, வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கிந்தியாவின் சில துணை பிரதேசங்களில் வெப்பநிலையானது குறைந்தபட்ச அளவை விட குறைவாக இருக்கும். அக்டோபர் மாதமே பல பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு வெப்பநிலை குறைந்திருந்தது. இவ்வாறு கூறினார்.

2016-ம் ஆண்டு முதல் இந்திய வானிலை மையமாது குளிர்கால வானிலை அறிக்கைகளை வெளியிடுகிறது. தற்போது முதல் முறையாக குளிர்கால எச்சரிக்கையை வானிலை மையம் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு குளிர்காலம் ஆனது ஓரளவு வெப்பமானதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

விவசாய நலத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் : முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்

No comments


விவசாயிகள் நலத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் பெறுவார்கள் என ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்

இது குறித்து கூறப்படுவதாவது: ம.பி., மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. காங்கிரஸ் கட்சியில் பிரிந்து சென்ற ஜோதிர் ஆதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்களால் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து பா.ஜ.கவை சேர்ந்த சிவராஜ்சிங்சவுகான் முதல்வராக பதவியேற்றார். இருப்பினும் அவரால் நலத்திட்டங்கள் செயல்படுத்தமுடியாமல் இருந்து வந்தது.

இதனிடையே மாநிலத்தில் இடைதேர்தல் நடைபெற்றது. இதில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை பா.ஜ.,வுக்கு கிடைத்தது. தொடர்ந்து செஹோர் என்னுமிடத்தில் பா.ஜ.க தொண்டர்களுக்கான பயிற்சி திட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கலந்து கொண்டார்.

அவர் கூறியதாவது: மக்களுக்கு சேவை செய்வதில் இருந்து பா.ஜ.க ஒரு போதும் விலகுவதில்லை. தற்போது ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைத்து உள்ளதால் அனைத்து திட்டங்களையும் திரும்ப துவங்குவேன். முதல்வரின் விவசாய நலத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என கூறினார்.

இந்த ஆண்டின் இறுதி மற்றும் 4ஆவது சந்திர கிரகணம் இந்தியாவில் இன்று நிகழ்கிறது

No comments


சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகண நிகழ்வாகும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரு நேர் கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும் போது இது நிகழ்கிறது. பூமியின் வெளிப்புற நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழும்போது பெனும்பிரல் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்தியாவில் இந்த சந்திரகிரகணம் மதியம் 1.04 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5.22 மணிக்கு முடிவடைகிறது. மாலை 3.15 மணி அளவில் கிரகணம் உச்சத்தில் இருக்கும். இந்த கிரகணம் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் இந்தியாவில் தெரியாது என வானியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
எனினும் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளான பாட்னா, ராஞ்சி, கொல்கத்தா, லக்னோ, வாரணாசி, புவனேஸ்வர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களால் இந்த கிரகணத்தை காணமுடியும்.

எனவே ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் உள்ளிட்ட பகுதிகளில் தெரியும். முன்னதாக கடந்த ஜனவரி 10, ஜூன் 5 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் 3 சந்திர கிரகணங்கள் நடைபெற்றன.

இன்று நடைபெறுவது 4ஆவது ஆகும். கார்த்திகை மாதத்தில் சுக்ல பட்சத்தில் நடைபெறுகிறது. இதுவரை நடந்த 3 சந்திர கிரகணங்களில் இன்று நடைபெறுவது மட்டுமே நீண்ட நேரம் அதாவது 4 மணி நேரம் நீடிக்கிறது.

சந்திர கிரகணங்கள் மூன்று வகைப்படும். அவை முழு கிரகணம், பகுதி கிரகணம், பெனும்ரல் கிரகணம் ஆகும். ஏற்கெனவே ஏற்பட்ட 3 கிரகணங்களும் பெனும்ரல் வகையை சேர்ந்தவையாகும்.

பெனும்ரல் கிரகணம் என்றால் பூமியால் சூரியன் பகுதி அளவு மறைக்கப்படும். அப்போது நிலவுக்கு சூரிய வெளிச்சம் போய் சேராது. பூமியின் வெளிப்புற நிழல் மட்டுமே நிலவுக்கு செல்லும்.

அதுதான் பெனும்ரல் கிரகணம் ஆகும். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 14-ஆம் தேதி நிகழ்கிறது.
Don't Miss
© 2017 -2021 AthibAn Tv Network Pvt Ltd