Type Here to Get Search Results !

இந்தியர் ஒருவரை கொன்ற பாகிஸ்தானின் நிஜ உலக தாதா இன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

 கடந்த 2013ம் ஆண்டு இந்தியர் ஒருவரை கொன்ற பாகிஸ்தானின் நிஜ உலக தாதா இன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சரப்ஜித் சிங் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். சரப்ஜித் சிங் 1990-ம் ஆண்டு பாகிஸ்தான் எல்லையில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், பஞ்சாபில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சரப்ஜித் சிங் முக்கிய குற்றவாளி என்றும், உளவு பார்த்ததில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது.

இதையடுத்து சரப்ஜித் சிங்குக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. எனினும், சரப்ஜித் சிங்கை நிரபராதி என்று கூறி உடனடியாக விடுவிக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால், இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான், சரப்ஜித் சிங்கை லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைத்தது. பாகிஸ்தான் சிறையில் 23 ஆண்டுகள் இருந்தார்.

இதற்கிடையில், 2001ல், இந்திய பார்லிமென்ட் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குருவை 2013 மே மாதம் இந்தியா தூக்கிலிட்டது.

இந்தியாவால் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியரான சரப்ஜித் சிங்கை சிலர் தாக்கினர். சரப்ஜித் சிங்கைத் தாக்கியவர்களில் முக்கியமானவர் அமீர் சர்ப்ராஸ் என்கிற தம்பா. இவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை தொடங்கிய பயங்கரவாதி ஹபீஸ் சையத்தின் நெருங்கிய கூட்டாளி. அமீர் சர்ப்ராஸ் பாகிஸ்தானின் நிழல் உலக தாதாவாகவும் செழித்துள்ளார்.

அமீர் சர்ப்ராஸ் சக கைதிகளுடன் சேர்ந்து சரப்ஜித் சிங்கை கொடூரமாக தாக்கினார். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சரப்ஜித் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

அதே நேரத்தில், சரப்ஜித் சிங் கொலையில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் நிழல் உலக தாதா அமீர் சர்ப்ராஸுக்கு எதிராக போதிய ஆதரவு இல்லை என்று கூறி, 2018ல் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட அமீர் சர்ப்ராஸ் கடந்த சில ஆண்டுகளாக லாகூரில் உள்ள இஸ்லாம்புரா பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இந்தியரான சரப்ஜித் சிங் கொலையில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் நிழல் உலக தாதா அமீர் சர்ப்ராஸ் இன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமீர் சர்ப்ராஸ் லாகூரில் உள்ள இஸ்லாம்புராவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இரு பைக்கில் வந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பலத்த காயமடைந்த அமீரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமீர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அமீரை சுட்டுவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமீப நாட்களாக பாகிஸ்தானில் பதுங்கியிருந்த இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் பயங்கரவாதிகள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் இந்தியர் சரப்ஜித் சிங் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான அமீர் சர்ப்ராஸ் சுட்டுக்கொல்லப்பட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom