Type Here to Get Search Results !

கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்

Detailed Report from District Collector regarding Corona Virus !
கன்னியாகுமரிமாவட்டத்தில் மொத்தம் 71 பேர் கொரோனா நோய்த்தொற்று சந்தேகபட்டியலில் இருந்து சோதனை செய்யப்பட்டு உள்ளனர். இதில் 58 பேருக்கு பரிசோதனைசெய்யப்பட்டதில் நோய் தொற்று இல்லை. 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என தெரிய வருகிறது. மீதமுள்ள நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட 5 நபர்களில் நான்கு நபர்கள் டெல்லி மத கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் மற்றோருவர் சென்னை விமான நிலையத்தில் வேலை பார்த்தவா.; நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காய்பட்டணம்தோப்பு மற்றும் மணிகட்டி பொட்டல் ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் 270 களப்பணியாளர்கள், 40 கண்காணிப்பாளர்கள் 5 மருத்துவர்கள் கொண்ட குழுக்களின் மூலம் ஒவ்வொரு வீடுகளிலும் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி நபர்கள் வசித்த வீட்டை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பகுதிக்குள் பொது மக்கள் யாரும் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரிமாவட்டத்தில் மொத்தம் 4446 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் உத்தரவை மீறியவகையில் 7 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் இன்று 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் 63 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் இதுவரை 974 வழக்குகளும்,785 வாகனங்கள் பறிமுதலும் செய்யப்பட்டுள்ளன.

கொரோனாநோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகமாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் துணைஆட்சியர் நிலையிலான அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆட்சியர்களுக்குஉரியஅறிவுரைகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட ஆர்வமுடைய, நல்ல உடல்நிலையிலுள்ளசெவிலியர்கள்,மருந்தாளுநர்கள், மற்றும் தன்னார்வலர்கள் தங்களுடைய முழு விபரத்தினை 95667 10110 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொது மக்கள் அடிக்கடி சோப்பு பொட்டு கை கழுவும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஐந்து நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவருகிறது. ஆகவே இத்தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு கவன குறைவாக இல்லாமல் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள் என்னவென்றால் களப்பணிகள் மேற்கொள்ள வரும் அனைத்து அரசு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு பணியாளர் கேட்க்கும் விவரங்களை சரியான முறையில் வழங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் முற்றிலுமாக தடுப்பதற்காக ஒவ்வொருவரும் வீட்டிற்கு வெளியில் வராமல் தத்தமது வீடுகளிலேருந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட ஆட்சியர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom