Type Here to Get Search Results !

🔴LIVE: Tamilnadu Corona Janata Curfew - கொரோனா ஜனதா ஊரடங்கு உத்தரவு - Exclusive Live Coverage

கொரோனா வைரஸ் உருவாகி, பரவி வருவதற்கு சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டினார். கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதில் சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லாமல்போனதால், அதற்கான விலையை இப்போது உலகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று சாடினார். ஆனால் அதற்கு பதிலடி கொடுத்த சீனா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சீனாவின் போராட்டத்தை அமெரிக்க தரப்பில் சிலர் களங்கப்படுத்த முயற்சிப்பதாக கூறியது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மீண்டும் சீனா மீது குற்றம்சாட்டும் வகையில் கருத்து வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் வந்தது. அது கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. இதில் சிலர் வருத்தப்படுகிறார்கள். அதை நான் அறிந்திருக்கிறேன். நான் ஜின்பிங்கை அறிந்திருக்கிறேன். அவர் சீனாவை நேசிக்கிறார். அவர் அமெரிக்கா மீது மதிப்பு வைத்திருக்கிறார். நானும் சீனா மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். நான் அதிபர் ஜின்பிங் மீதும் மதிப்பு வைத்துள்ளேன். அவர் எனது நண்பர். சீனாவுடன் எனக்கு நல்லுறவு உள்ளது என்று அவர் கூறினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் பேசினார். அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா தகவல்களை பகிர்ந்து கொள்வதை தாமதப்படுத்தியது. இந்த தகவல்கள் உடனே தெரிந்திருக்க வேண்டியதாகும். அதை தெரிந்து கொள்வதற்கு உலகத்துக்கு உரிமை உள்ளது. உலகத்துக்கு இந்த ஆபத்து இருப்பது முதலில் சீனாவுக்கு தெரியும். மேலும் நமது விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தரவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய சிறப்பு கடமை அவர்களுக்கு உண்டு. இதில் சீனாவுக்கு முதலில் உதவ விரும்பிய தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறபோது, தாமதம் ஆகிற ஒவ்வொரு தருணமும் உலகம் முழுவதற்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இப்போதும் கூட, சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு கிடைக்கிற ஒவ்வொரு தகவலையும் உலகத்துக்கு கிடைக்கச்செய்ய வேண்டும். மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயம் ஆகும். இது, நிகழ்கால தகவல்களை பகிர்ந்து கொள்வது பற்றியது ஆகும். இது அரசியல் விளையாட்டு அல்ல. பழிவாங்கலும் அல்ல. டுவிட்டர் மற்றும் உலக அளவில் இருந்து தவறான தகவல்களை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் அரசிடமிருந்து சிலவும், தனிநபர்களிடம் இருந்து பலவும் வந்தன. சீனா, ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள்தான் தவறான தகவல் பரப்புவதில் ஈடுபட்டன என்று அவர் கூறினார்.    -       கொரோனா வைரஸ் உருவாகி, பரவி வருவதற்கு சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டினார். கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதில் சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லாமல்போனதால், அதற்கான விலையை இப்போது உலகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று சாடினார். ஆனால் அதற்கு பதிலடி கொடுத்த சீனா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சீனாவின் போராட்டத்தை அமெரிக்க தரப்பில் சிலர் களங்கப்படுத்த முயற்சிப்பதாக கூறியது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மீண்டும் சீனா மீது குற்றம்சாட்டும் வகையில் கருத்து வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் வந்தது. அது கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. இதில் சிலர் வருத்தப்படுகிறார்கள். அதை நான் அறிந்திருக்கிறேன். நான் ஜின்பிங்கை அறிந்திருக்கிறேன். அவர் சீனாவை நேசிக்கிறார். அவர் அமெரிக்கா மீது மதிப்பு வைத்திருக்கிறார். நானும் சீனா மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். நான் அதிபர் ஜின்பிங் மீதும் மதிப்பு வைத்துள்ளேன். அவர் எனது நண்பர். சீனாவுடன் எனக்கு நல்லுறவு உள்ளது என்று அவர் கூறினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் பேசினார். அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா தகவல்களை பகிர்ந்து கொள்வதை தாமதப்படுத்தியது. இந்த தகவல்கள் உடனே தெரிந்திருக்க வேண்டியதாகும். அதை தெரிந்து கொள்வதற்கு உலகத்துக்கு உரிமை உள்ளது. உலகத்துக்கு இந்த ஆபத்து இருப்பது முதலில் சீனாவுக்கு தெரியும். மேலும் நமது விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தரவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய சிறப்பு கடமை அவர்களுக்கு உண்டு. இதில் சீனாவுக்கு முதலில் உதவ விரும்பிய தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறபோது, தாமதம் ஆகிற ஒவ்வொரு தருணமும் உலகம் முழுவதற்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இப்போதும் கூட, சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு கிடைக்கிற ஒவ்வொரு தகவலையும் உலகத்துக்கு கிடைக்கச்செய்ய வேண்டும். மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயம் ஆகும். இது, நிகழ்கால தகவல்களை பகிர்ந்து கொள்வது பற்றியது ஆகும். இது அரசியல் விளையாட்டு அல்ல. பழிவாங்கலும் அல்ல. டுவிட்டர் மற்றும் உலக அளவில் இருந்து தவறான தகவல்களை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் அரசிடமிருந்து சிலவும், தனிநபர்களிடம் இருந்து பலவும் வந்தன. சீனா, ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள்தான் தவறான தகவல் பரப்புவதில் ஈடுபட்டன என்று அவர் கூறினார்.  இயல்பு நிலை இந்த நிலையில்தான், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதாக சீனா அறிவித்துள்ளது. சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக வுஹான் மாகாணத்தை வெளி தொடர்புகள் இன்றி துண்டித்து வைத்திருந்தது அந்த நாட்டு அரசு. தற்போது, புதிய வைரஸ் பாதிப்புகள் எதுவும் உள்நாட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியிருப்போரிடம் சொற்ப அளவில் புதிதாக நோய் தாக்கம் கண்டறியப்பட்டு வருகிறது என்றும் சீனா தெரிவித்துள்ளது.   சீன மீடியா ஆனால் CAIXIN சீன தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்த ஊடகம் இது தொடர்பாக வேறு மாதிரி தகவல்களை வெளியிட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் மற்றும் விசில்ஃப்ளோவர்களிடம் கலந்து பேசியதில் இந்த தகவலை வெளியிடுவதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. இது பற்றி அது என்ன கூறியுள்ளது என்பதை பார்க்கலாம்: சீனாவின், சில மாகாண அரசாங்கங்கள் மின்சார கட்டணங்களுக்கு மானியம் வழங்குவதோடு கட்டாய உற்பத்தி ஒதுக்கீட்டையும் வழங்குகின்றன. வுஹானுக்கு கிழக்கே உள்ள ஒரு மாகாணமான ஜெஜியாங், பிப்ரவரி 24 ஆம் தேதி நிலவரப்படி, கொரோனா வைரஸுக்கு முந்தைய பணித் திறமையில் 98.6 சதவீதம் அளவுக்கு மீட்டெடுத்து அசத்திவிட்டதாக கூறியுள்ளது.   சும்மா ஓடுகிறது ஆனால் அரசு ஊழியர்கள், 'கெய்சானிடம்' உண்மையில் இந்த தரவுகள் போலியானவை என்று கூறுகின்றன. பெய்ஜிங், ஜெஜியாங் நகரங்களின் மின்சார நுகர்வு அளவை சரிபார்க்கத் தொடங்கினோம். அங்கெல்லாம் மாவட்ட அதிகாரிகள் சும்மாவே மின்சார மீட்டர்களை ஓட விட மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்களாம். விளக்குகள், இயந்திரங்களை சும்மா ஓட விடுவதாகவும் தெரிகிறது. ஆலைகளில் மிஷின் ஓடுகிறது, ஆனால் ஊழியர்கள் வரவில்லை. ஊழியர்களின் வருகை பதிவுகளையும் பொய்யாக உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.   குடியிருப்புவாசிகள் இப்படித்தான் போலியான அறிக்கையை, சீனாவின் மத்திய அரசுக்கு மாகாணங்கள் கொடுத்து வருகின்றன. இதை மத்திய அரசே சொல்லி செய்கிறார்களோ அதுவும் தெரியவில்லை. வூகானில் கூட இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக காண்பிக்க முயற்சிகள் நடந்தன. உணவு சப்ளை எப்படி நடக்கிறது என்பதை பற்றி ஆய்வு செய்ய 'மத்திய தலைவர்கள்' சென்றனர். இதன் மூலம் அங்கு இயல்பு நிலை திரும்பிவிட்டதாக காண்பிக்க முயற்சி நடைபெற்றது. அப்போது சில குடியிருப்பு வாசிகள், "போலி, போலி, எல்லாமே போலி" என கூச்சல் போடுகிறார்கள். இந்த வீடியோ வைரலாக சுற்றி வருகிறது. இவ்வாறு, CAIXIN ஊடகம் தெரிவித்துள்ளது.    -      இத்தாலியில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐ நெருங்குகிறது. அந்நாட்டில் நேற்று மட்டும் 793 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ராணுவ உதவியை இத்தாலி நாடியுள்ளது.     -      கொரோனா: உலக அளவிலான பலி 13 ஆயிரத்தை தாண்டியது கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலக அளவில் 13 ஆயிரத்தை தாண்டியது. உலக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் மொத்தம் 332 பேர் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.     -     இந்தியாவில் கரோனா பாதிப்பு 315-ஆக உயர்வு   நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 315-ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் இன்று சுயஊரட்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தற்போது 315-ஆக உயர்ந்துள்ளது. இதனை இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. அதில் 39 போ் வெளிநாட்டவா்களாவா். அவா்களில் 17 போ் இத்தாலி, 3 போ் பிலிப்பின்ஸ், 2 போ் பிரிட்டனைச் சோ்ந்தவா்கள். அதுதவிர, கனடா, இந்தோனேஷியா, சிங்கப்பூா் நாடுகளைச் சோ்ந்த தலா ஒருவரும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் உள்ளனா். 23 போ் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டனா். 4 போ் உயிரிழந்துவிட்டனா்.  உயிரிழந்த நால்வா் தில்லி, கா்நாடகம், பஞ்சாப், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 63 போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 3 போ் வெளிநாட்டவா்களாவா். அடுத்து கேரளத்தில் 7 வெளிநாட்டவா்கள் உள்பட 40 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 3 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.   -    இன்று 22 - 03 - 2020 மாலை 5.00 மணிக்கு கை தட்டும் பதிவில் இடம்பெறுங்கள்!   ‘மக்கள் சுய ஊரடங்கு’ மூலம் கரோனா நோய்த் தொற்று சவாலை எதிா்கொள்ள நாடு தயாராக இருக்கிறது என்பதை இன்று மக்கள் வெளியே வராமல் உணா்த்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறாா். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைய மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஓய்வின்றிப் பணியாற்றி வருகின்றனா். அவா்களது சேவையைப் பாராட்டி இன்று மாலை 5 மணிக்கு இருக்கும் இடத்தில் எழுந்து நின்று கை தட்டியோ, மணியோசை எழுப்பியோ ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பிரதமா் கேட்டுக்கொண்டுள்ளாா். இந்த அரிய நிகழ்வில் நீங்கள் பங்குகொண்டீா்களா? அந்தப் புகைப்படங்களை அனுப்பித் தந்தால், அதில் தோ்வு செய்யப்படுபவை ‘தினமணி’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். புகைப்படங்களை இன்றே athibantv@myself.​c‌o‌m, ‌athibantvnetwork@‌g‌m​a‌i‌l.​c‌o‌m முகவரிகளுக்கு அனுப்பவும்.    -     

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom