Type Here to Get Search Results !

நான் பட்ட கஷ்டத்தை என் குழந்தைகள் அனுபவிக்க கூடாது கொலை வழக்கில் கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்

 மகனையும் மகளையும் தலையணையால் முகத்தில் அழுத்தி தாய் கொன்றுள்ளார்.

பெங்களூரு ஜலஹள்ளி அருகே உள்ள போவி காலனியில் 30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் இருந்தனர். அந்த பெண்ணின் கணவர் தனது 7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், ஜலஹள்ளி போலீசார் கடந்த மாதம் (மார்ச்) அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த மகனை தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சு திணறி தாய் கொன்றார். இதுகுறித்து அந்த பெண் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஜலஹள்ளி போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் மகனையும் மகளையும் கொன்றது ஏன்? அந்த பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், எனது கணவர் பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக சிறை சென்றார். அதன் பிறகு, என் மகன் மற்றும் மகளுடன் என் தாய் வீட்டிற்கு திரும்பினேன். அவர்களை வளர்க்க தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றேன். அப்போதும் பணப் பிரச்னை தொடர்ந்தது.

என் கணவர் சிறைக்கு சென்ற பிறகு, நான் மிகவும் கஷ்டப்பட்டேன். நான் பட்ட கஷ்டத்தை என் மகனும் மகளும் அனுபவிக்கக் கூடாது என்று நினைத்தேன். இதனால் தான் 2 பேரையும் கொன்றதாக அந்த பெண் போலீசாரிடம் கூறியுள்ளார். இவ்வாறு கூறும்போது அவர் கண்ணீர் விட்டு அழுததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, கணவர் சிறைக்கு சென்றதால் சிறுமி தனது தாய் வீட்டில் தங்கியுள்ளார். ஆனால் சிறுமியின் தாய் வேலைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனால் மகன் மற்றும் மகளுடன் தனியாக இருந்த பெண் இருவரையும் கொன்றுவிட்டு மூதாட்டி வீட்டில் இருந்திருந்தால் இரண்டு குழந்தைகளும் தப்பித்திருப்பார்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom