Type Here to Get Search Results !

கோவில் அடிமை நிறுத்து....! சத்குருவின் கோரிக்கையால்.... பதறும் அரசியல் கட்சிகள்....! பரபரப்பு தகவல்...?


கவனிக்கப்படாமல் சிதிலம் அடைவதை தடுக்க கோவில்களை பக்தர்களிடமே ஒப்படையுங்கள் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு வலியுறுத்தி வரும் நிலையில் ஈஷா யோகா மையத்தை அரசுடமையாக்க வேண்டும் என்று ஒரு தரப்பு புறப்பட்டுள்ளதன் பின்னணி தெரியவந்துள்ளது.

கடந்த 40 வருடங்களுக்கு முன்பு வரை பூஜை, புனஸ்காரம் என்று உயிர்ப்புடன் இருந்த கோவில்கள் பல தற்போது சிதிலம் அடைந்துவிட்டன. இதற்கு காரணம் கோவில்களை பராமரிக்க சரியான ஆட்கள் இல்லை என்பது தான். இந்து சமய கோவில்கள் பெரும்பாலும் இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இப்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களின் வருகை அதிகம் உள்ள, வருமானம் அதிகம் உள்ள கோவில்கள் மட்டுமே சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால் கிராமப்பகுதிகளில் உள்ள கோவில்களை பராமரிக்க ஆட்களும் இல்லை, பணமும் இல்லை.

இதனால் கோவில்களை அந்தந்த பகுதி பக்தர்களிடமே ஒப்படைத்தால் அவர்கள் கோவில்களில் பூஜை, புனஸ்காரம் என செய்து கோவில்களை மறுபடியும் உயிர் பெறச் செய்வார்கள் என்று சத்குரு கூறி வருகிறார். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை மறுபடியும் பக்தர்கள் பொறுப்பில் விடக்கூடாது என்று ஒரு தரப்பு புறப்பட்டுள்ளது. இப்படி புறப்பட்டுள்ள அந்த தரப்பின் பின்னணியில் முக்கிய அரசியல் கட்சி ஒன்று இருப்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. கோவில்களை பக்தர்களிடம் ஒப்படையுங்கள் என்று சத்குரு கூறுவதால் எதிர்காலத்தில் தங்களுக்கு பாதிப்பு வரும் என்று பயந்தே அவருக்கு எதிராக அஸ்திரங்களை அந்த கட்சி ஏவி வருவதாக கூறுகிறார்கள்.

அதாவது தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்திவிட்டு சென்றுவிடுவார்கள். அதுவே கோவில் உள்ள பகுதியை சேர்ந்த இந்து பக்தர்கள் நிர்வாகத்தின் கீழ் கோவில் வந்தால் அங்கு வழிபாட்டோடு வேறு சில நிகழ்ச்சிகளும், விழாக்களும் அடிக்கடி நடத்த நேரிடும். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள இந்து மக்களை எளிதாக ஒன்றுபடுத்த முடியும். இப்படி இந்துக்கள் ஒன்றிணைந்துவிட்டால் அது அந்த மதத்திற்கு எதிராக இத்தனை நாட்களாக பகுத்தறிவு பேசி வரும் அரசியல் கட்சிகளுக்கு ஆபத்தாகி விடும்.

உதாரணத்திற்கு தற்போது இந்து சமய கோவில்கள் தவிர மற்ற மதங்களின் வழிபாட்டுத்தலங்கள் அந்தந்த மதத்தை சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதனால் வழிபாடுகளின் போது வழிபாட்டு தலங்களை நிர்வகிக்கும்  நிர்வாகிகள் தேர்தல் சார்ந்த சில முடிவுகளை எடுத்து அதனை பின்பற்றுமாறு கூறுவதை கூட பார்க்கலாம். அண்மையில் கூட இந்து மதம் சார்ந்த ஒரு கூட்டத்தில் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு பிராமணர், மறைமுகமாக மக்களை கேட்டுக் கொண்ட வீடியோ வைரலானது. இது போன்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து முடிவெடுக்க ஆரம்பித்தால் தங்களால் பகுத்தறிவு பேச முடியாது என்கிற அச்சமே சத்குருவின் கோவில் அடிமை நிறுத்து இயக்கத்தை ஒரு தரப்பினர் எதிர்க்க காரணமாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom