Breaking

6/trending/recent
Type Here to Get Search Results !

நான் நேர்மையாக வரிகட்டுகிறேன்..... கோவை தெற்குத் தொகுதி வேட்பாளர் கமல்ஹாசன்......! அது என்ன...?


நேர்மையாக வரி கட்டித் தான் ஆக வேண்டும் மிஸ்டர் கமல் .
அது  நாட்டை நேசிக்கும் , நாட்டை வளப்படுத்த நினைக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை ஆகும் .
அதை பெருமையாக நீங்கள் சொல்லிக் கொள்வதில்  எல்லாம் நேர்மை எதுவும் இல்லை ..

இந்த தேசத்தின் உண்மையான குடிமகனாக அனைத்து மதங்களை சேர்ந்த மனிதர்களையும் மதிக்க வேண்டும் .

பள்ளப்பட்டியில் போய் 
சுதந்திர இந்தியாவின் 
முதல் தீவிரவாதி 
ஒரு இந்து னு பேசிய 
நீங்கள் 
நவகாளியில் பல இந்துக்கள் இஸ்லாமியர்களால் படுகொலை செய்யப்பட்ட சரித்திரத்தை பற்றி பேச ஏன் மறந்தீர்கள் மிஸ்டர் கமல்ஹாசன் ???
அதுவும் இஸ்லாமிய ஓட்டுக்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் இதைப் பற்றி பேசி நெருப்பை மூட்டி  விட வேண்டிய அவசியமென்ன ???

அப்போதே ஒரு சராசரி திராவிட அரசியல்வாதியாகி விட்ட நீங்கள் 
மதமாற்ற புரோக்கர்களின் கைக்கூலியாகி செயல்படுகிறீர்கள் நீங்கள் என்பது  தான் உண்மையாகி விட்டது மிஸ்டர் கமல் .

ஒரு நல்ல சிறந்த 
ஒழுக்கமுள்ள
குடிமகனாக வாழும்  மோதி!
தேசத்திற்காக உழைக்கும்  பிரதமர் மோதி அரசியல் ஆதாயங்களுக்காக தனது மதத்தை விட்டுத் தந்து பிறர் மதங்களை காயப்படுத்தி எங்காவது பேசினாரா என்று   நிருபிக்க முடியுமா உங்களால் ???
முடியாது ... 

மோதி நாட்டை காதலித்தார் ...
தேசத்தின் இறையாண்மையை தன் உதிரத்தில் கலக்க விட்டு   வாழ்வை தியாகமாக்கி இந்தியத் திருநாட்டை தனது நெஞ்சில் சுமந்து வாழ்கின்றார் .
அவர் தனி மனித வாழ்க்கையிலோ 
அல்லது அரசியல் சார்ந்த வாழ்க்கையிலோ அவர் மீது ஒரு குற்றமும்  காண முடியாது .
தனது தாயை விட தனது தாய்நாட்டை தான் அவர் முதன்மையாக நேசித்தார் .

அப்படிப்பட்டவரை எதிர்க்கட்சிகள் இழித்துப் பழித்து நின்றன .
கடைசியில் அவர்களின் நிலை என்ன ???
வரலாறு காணாத தோல்வி .

உங்களை போன்ற
நடிகர்கள் மயக்கத்தில் ஊறிப் போன தமிழகத்தை ,
தமிழகமே உணர்ந்து திருந்தினால்
ஒழிய  தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது .

உங்களுக்கு தேவை மோடியா இல்லை இந்த தாடியா என பிரச்சாரம் செய்யும் உங்களை நினைத்தால் சிரிப்பு தான் வருகின்றது.

தமிழக முதல்வராக மோடியா வந்து தேர்தலில் நிற்கிறார் ??
உங்களுக்கு தேவை
 எடப்பாடி யா ??
சீமானா ஸ்டாலினா என்றல்லவா நீர் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும் .
தேவையின்றி பிரதமரை எதற்கு அங்கே இழுத்தீர் ???

ஹலோ மிஸ்டர் கமல் ..
ஒரு படத்திற்கு வந்த சிக்கலையே சிக்கெடுக்க வக்கில்லாமல் 
துணிவில்லாமல் 
நாட்டை விட்டே ஓடுகிறேன் என்று சொன்ன தாடிக்கு தமிழக முதல்வராக அமர்ந்தால் எத்தனை பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும் என்பதாவது தெரியுமா தெரியாதா ???

ஊழல்களை ஒழிப்பேன் என்று
சொடுக்கு போட்ட நேரத்தில் ஒன்றை சாதிக்க அது நீங்கள் திரையில் பூசும் அரிதாரமென்று 
நினைத்தீரோ ??
ஒவ்வொரு தனி மனிதனும் தேசப்பற்றோடு சமூக அக்கறையோடு தானாக திருந்தினால் ஒழிய ஊழல்களை ஒழிக்க முடியாது .
வாரும் ! வாய்ப்பு கிடைத்தால் ஆண்டு  பாரும் ...
யாரும் தடுக்கவில்லை இங்கே ..
அமர்ந்தால் தான் தெரியும் .
தலைவலியும் திருகு வலியும்..
ஐய்யய்யோ நான் உலகத்தை விட்டே போகிறேன் 
ஆளை விடுங்கடா என்பீர்கள் .
 
இதுவரை   இந்தியாவை ஆண்ட பிரதமர்கள் எவருக்குமே இல்லாத நெஞ்சத்துணிவோடு இந்தியாவின் தன்மானம் எனக் கருதிய காஷ்மீரின் சிறப்பு சட்டத்தை உடைத்தெறிந்து இமயம் முதல் குமரி வரை என்று இருந்த  இந்தியாவை 
காஷ்மீர் முதல் குமரி வரை என்று சரித்திரத்தை 
மாற்றி எழுதி  
வாழும் போதே வரலாற்றில் நிலைத்து நின்று 
பெருமை சேர்த்தார் இந்தியர்களுக்கு . 
பிரதமர் நரேந்திர மோதி !

இந்தியாவை ஏளனமாக நினைத்த எதிரி நாடுகளை சிம்ம சொப்பனமாக எதிர் கொண்டு 
வாடா ஒரு கை பார்க்கலாம் என்று 
துணிந்து நின்றார் மோடி .

பூச்சாண்டி காட்டிய சீனா அதிர்ந்து நின்றது .
ஆனாலும் எல்லையிலே ஆயுதங்களை குவித்து நின்றது .
அதைக்  கண்டு கூந்தலுக்கு கூட சட்டை செய்யாமல் 
இந்தியாவும் தனது  எல்லையிலே முப்படைகளோடு தயாராக நின்றது .
எதிரிகளை எதிர் கொள்ள 
ராணுவத்திற்கு முழுச் சுதந்திரம் தரப்பட்டது .

பார்த்தது சீனா ..
தன் மிரட்டல்  மோடி யிடம் எடுபடாது என்று பம்மி பதுங்கி பின் வாங்கி போனது ..
திமிர் காட்டிய பாக்கிஸ்தானின் பொடனியிலேயே அடித்தார் மோடி அவன் அபகரித்த எல்லைக்குள்ளேயே சென்று..
மரண அடி அடித்தார் .
இழந்த நாற்பதற்கு நானூறை சிதறடித்தார் .
உலகநாடுகளே வாய் மூடி நின்றன.
இவரல்லவா  சுத்தமான வீரமான ஆண்மகன்.
தன் ஆட்சியில் இதுவரை ஒரு ஊழல்கரை படியாதவர் .
வராதே என்ற சொன்ன உலக வல்லரசு நாடான அமெரிக்க அதிபர் தோளை தொட்டு அடித்து பேசுமளவு   மோடியை அமெரிக்கா சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது .
அதுவல்லவா அட்டகாசமான வீரம் .
 
உலகநாடுகளுக்கு தெரிந்த மோடியின் வீரமும் விவேகமும் 
எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும் .
ஆனாலும் திமிராக ஆதாரம் தா என்று திமிராக பேசி தேர்தலில் சேதாரமாகின ..
காஷ்மீர் விஷயத்தில் அரசியல் செய்து அவமானப்பட்டனர்.
இதெல்லாம் தெரிந்தும் 
கமல்ஹாசனுக்கு தெரியாது போனது தான் போல் நடிப்பது தான் பெரிய விஷயம் .

கட்சி தொடங்கி விட்டால் வல்லமையான பிரதமரை எதிர்க்க வேண்டும் என்பது தான் நீங்கள் கற்ற அரசியல் அரிச்சுவடி .
தேறவே மாட்டீர்கள் .
ஆனால் சசிகலா கைகாட்டிய எடப்பாடி முதல்வர் 
விவேகத்தோடு மத்திய அரசோடு மோதாமல் 
புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார் .
அது தான் ராஜதந்திர அரசியல் .

குருட்டுத் தனமான புத்தியோடு 
தேர்தலில் வெற்றியா தோல்வியா என்பதே தெரியாமல் பிரதமரை புறம் பேசுவது உலகமகா கீழ்த்தரமான அரசியல் .
அதைத் தான் நீரும் செய்கிறீர் .
தேறமாட்டீர் .
அறிவோடு  மக்கள்  யோசித்தால் 
சினிமா 
மோகத்தை தவிர்த்து யோசித்தால் 
நீங்கள்  அரசியலில் வெறும் 
அழுகிய முட்டை என்பது புரியும் .

பெரிய மேதாவி மாதரி சட்டசபை தேர்தலுக்கு 
நின்று விட்டு 
மோடியா தாடியா என்றால் 
மோடியா முதல்வர் வேட்பாளராக 
வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார் ????
அல்லது நீர் மூன்றாவது அணி அமைத்து பாராளுமன்ற தேர்தலுக்கா  நிற்கிறீர் .???
சுத்த 
லூசுப்பயலாக இருக்கிறீரே ..

சினிமாவில் ஹீரோவாக இருப்பவனெல்லாம் 
அரசியலில் எம்ஜிஆராக கனவு காண முடியாது .
நாடாளவும் இயலாது .
புரிந்து கொள்ளுங்கள் 
மிஸ்டர் கமல் .
விதி யாரை விட்டது ???

மக்களுக்காக  அரசியல் களம் 
காண்பவன் பலகோடி நஷ்டங்களை விட்டு விட்டு வந்ததாக பேசமாட்டான் .
கூத்தாடிகளால் தமிழகத்திற்கு  ஏழரை என இருந்தால் தமிழகம் தேறாது .

கோவை தெற்குத் தொகுதி
மக்கள் 
நாட்டை விட்டே ஸாரி ஸாரி 
தொகுதியை விட்டே ஓடும்
எம்.எல்.ஏ வேண்டுமெனில் 
கமலை தேர்ந்தெடுங்கள் .
அல்லது 
கோவை தெற்குத் தொகுதிக்கு நிரந்தர எம்.எல்.ஏ வேண்டுமெனில் 
கோவை தெற்குத் தொகுதி  மக்கள் விவேகமானவர்களெனில் இதை யோசித்து 
தாமரைக்கு வாக்களித்து 
வானதிக்கு வாய்ப்பளியுங்கள் !
பின்னாளில் பாஜக அவருக்கு மந்திரி பதவி அளிக்க முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கும் .
அது மேலும் பலமாகும் கோவை தெற்குத் தொகுதிக்கு .

Post a comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad