Breaking

6/trending/recent
Type Here to Get Search Results !

சொந்த வீடும் இல்லை... வீட்டிலும் யாரும் இல்லை... எம். ஆர் ‌. காந்தி


இப்படி நபர்கள் இருப்பார்களா என்கிற சந்தேகம் வருமே அப்படி ஒரு ஆள் இவர் என்றார் என் #நாகர்கோவில் நண்பர் இவரை பற்றி..

இவர் நாகர்கோவில் பாஜக வேட்பாளர் #MRகாந்தி 

என்ன ஏதென விசாரித்தால்..

இவர் பூர்வீகமாக பெரிய பணக்காரராம்... நாகர்கோவில் செட்டிகுளத்தில் உள்ள பல நிலங்கள் கடைகள் காம்ப்ளக்ஸ்  அனைத்தும்  இவருக்கு சொந்தமானவையாக இருந்ததாம்...

தர்ம காரியங்கள் உதவிகள் என செய்தே இவரிடம் இப்போது கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லை என்கிறார்கள்

சொந்த வீடும் இல்லை... வீட்டிலும் யாரும் இல்லை..

ஆனால் மக்கள் ஆதரவு அவ்வளவு உள்ளதாம்... மக்களுடன் மக்களாக பல காலமாக அங்கேயே வாழ்ந்து சுக துக்கங்கள் என்றால் முதல் ஆளாக பங்கேற்று தன்னால் முடிந்த உதவிகளை உடனே செய்வாராம் 1967முதல் அரசியல் களத்தில் இருக்கும் 
இந்த மதம் இந்த சாதி என பாராமல் இந்த இளைஞர்..., இவரிடமும் அனைவரும் அன்பு பாராட்டுவார்களாம்

பல தேர்தல்களை, பெரிய பண பலம் அதிகார பலம் நட்சத்திர அந்தஸ்து எதுவும் இல்லாமல் எதிர்கொண்டு இருக்கிறார்... வெற்றியை சில அடிகளில் தனியாளாக தவற விட்டவர்.. இருந்தும் தன் மக்கள் நல செயல்பாடுகளில் சளைக்கவில்லை என்கிறார்கள்

1984ல் பாஜக வேட்பாளராக குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 589 வாக்குகள் வித்தியாசத்தில் சக்திவாய்ந்த எம்ஜிஆரின் அதிமுக வேட்பாளரிடம் வெற்றி இழந்தாராம்.எம்ஜிஆர் , கருணாநிதி இரு புயல் களுக்கு நடுவே படகை செலுத்தி இருக்கிறார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் மும்முனை ப்போட்டி நடந்தது நாமறிவோம் (ஜெ தலைமையில் அதிமுக, கருணாநிதி தலைமையிலான திமுக, விஜயகாந்த் தலைமையில் மக்கள் நல கூட்டணி)..பாஜக தனியாக தேர்தலை எதிர்க்கொண்டது... அப்படி இருந்தும் இவர் பாஜக க்கு போட்டியிட்டு, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் என்பது, கட்சி கடந்து, தனி ஒரு மனிதராக மக்கள் மத்தியில் இவரின் செல்வாக்கை காட்டுகிறது.

குமரி மாவட்டத்தில் பல மக்கள் நல பணிகளில் இவரின் உழைப்பு இருக்கிறதாம்... இதனால் மக்கள் மத்தியில் பெருகும் இவரின் செல்வாக்கு பிடிக்காதவர்கள் எதிரணியில் மட்டுமல்ல இவரின் சொந்த அணியிலும் உண்டாம்.

ஏழை மாணவர்களுக்கு கல்லூரியில் சீட் வாங்கி தர முனைப்பது, ஏழைகளுக்கு மருத்துவ செலவுகளுக்கு உதவுவது, மருத்துவ தொகையை குறைக்க கோருவது, கோவில் குடை , அன்னதானம் என பலருக்கு பல நேரங்களில் go to man ஆக திகழ்கிறாராம்‌.. இவரை சந்திப்பது பேசுவது அவ்வளவு எளிதாம்..டீ கடை, ரோட்டோர நடை,  பைக்கில் லிஃப்ட் கேட்டு செல்வது என மிக எளிய வாழ்க்கை வாழ்கிறாராம்.பல பல வருடங்களாக காலில் செருப்பு போடுவதில்லை, தாய் மண்ணுக்கு மரியாதை என்கிறாராம். நடந்தே சென்று வாக்கு சேகரித்து வருகிறார் தற்போது.

இந்த முறையும் இவருக்கு சீட் ஒதுக்கியவுடன் மதிய உணவை உடனே மன நல காப்பகத்தில் குழந்தைகளுடன் பிராத்தனை செய்து இறைவனுக்கு நன்றி சொன்னாராம்

"நீங்க வாக்கு க்கு பணம் கேட்டாலும் தர மாட்டேன் ஏன்னா என் கிட்ட இல்லை" என வெள்ளந்தியா சிரிக்கிறாராம் இந்த காந்தி. 

நாகர்கோவில் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பல வருடங்களாக வாழும் இவர்  இம்முறை சட்டமன்றம் செல்ல வேண்டும் என உறுதி ஏற்போய்

வாழ்த்துகள் ஐயா

Post a comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad