Type Here to Get Search Results !

திருவண்ணாமலை தீபத் திருவிழா ... மாவட்டத்திற்கு வெளியில் இருந்து வரும் பக்தர்கள் நகரத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது



திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 29ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.  இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தீபத் திருவிழா குறித்து ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தீபத் திருவிழாவையொட்டி வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் நாகராஜன் தலைமையில் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  29, 30 ஆகிய தேதிகளில் கிரிவலம் வரவும், மலை ஏற முற்றிலும், அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 9 இடங்களில் காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் உள்ளே வராத அளவுக்கு கண்காணிக்கப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom