பிரசாந்த் பூஷனுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.1 அபராதம்!
மூத்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த்  பூஷன் உச்ச நீதிமன்றத்தையும், அதன் தலைமை நீதிபதியையும் விமர்சித்ததாக நீதிமன்றம் அவரை அமவதிப்பு குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில் தண்டனை குறித்த விவரங்கள் தற்போது வெளி வந்துள்ளன.

குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட பிரசாந்த் பூஷனுக்கு உச்சநீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த தொகையை செப்.15ம் தேதிக்கு முன்னதாக செலுத்தவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறை தண்டனையையும், மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக பணியாற்ற தடையும் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

முன்னதாக பூஷன், வழக்கிற்கு ஆதாரமாக இருந்த தன்னுடைய டிவிட் குறித்து பரிசீலனை செய்யவும், அப்படியொரு டிவிட் போட்டதற்காக அவர் மன்னிப்புகோரவும் மறுத்துவிட்டார். நீதிமன்றம் அவர் தன்னுடைய டிவிட் குறித்து பரிசீலனை செய்யவும், மன்னிப்புகோரவும் மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a comment

0 Comments