பிரேக் ஃபாஸ்டுக்கு ஏற்ற சுவையான 5 ரவை ரெசிபிகள்!
ரவை உப்புமா என்றாலே பெரும்பாலானோருக்குப் பிடிப்பதில்லை. அதே நேரத்தில், ரவையில் செய்யப்படும் கேசரி, அல்வா, லட்டு போன்ற மற்ற பதாரத்தங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், அவை உணவல்ல, சாதாரண ஒரு ஸ்வீட் ரெசிபி தான். ரவையில் அனைவரும் விரும்பும் பிரேக் ஃபாஸ்ட் செய்வது தான் சவால். 

அந்த வகையில், நல்ல சூப்பரான, டேஸ்டியான 5 ரவை பிரேக் ஃபாஸ்ட் ரெசிபிகள் குறித்த சிறுகுறிப்பை இங்குக் காணலாம். இனி ரவையில் இதுபோன்ற விதவிதமான பிரேக்பாஸ்ட் ரெசிபிகளையும் செய்து அசத்தலாம்.

1. ரவை தோசை

தோசை  அனைவருக்கும் பிடிக்கும். தோசையில் நிறைய வெரிட்டிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ரவை தோசை. அரிசி மாவோடு ரவையும் சேர்த்து, நல்ல கிரிஸ்பியான ரவை தோசை செய்யலாம். 

2. காய்கறி ரவை உப்புமா

ரவை உப்புமா சாதாரணமாக செய்தால் சிலருக்குப் பிடிக்காது. அதுவே பீன்ஸ், கேரட் துண்டுகளை சிறிதாக வெட்டி, காய்கறிகள், நெய் சேர்த்து செய்யப்படும் ரவை உப்புமாக நல்ல டேஸ்டாக அமையும். மேலும், உடல்எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள், தங்கள் பிரேக் பாஸ்ட் பட்டியலில் காய்கறி ரவை உப்புமா சேர்த்துக்கொள்ளலாம். 

3. மசாலா ரவை இட்லி

இதுவும் ஒரு புது ரெசிபி தான். சாதாரணமாக ரவை இட்லி கேள்விப்படிருப்போம். அதே போன்று தான், மசாலா ரவை இட்லியும். தினமும் சாதாரணமான இட்லி, தோசை சாப்பிட்டவர்களுக்கு இது ஒரு புது விருந்தாக அமையும். இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் ஆகியவை சைடிஷ் ஆக வைத்துக்கொள்ளலாம்..

4. ஆனியன் ரவை தோசை

ரவை தோசையில் வெங்காயம் இல்லையென்றால் எப்படி? சாதாரணமாக ரவை தோசை சுட்டப்பிறகு, சிறிது வெங்காயத்தையும் சேர்த்து, ஆனியன் ரவை தோசையை சூப்பராக செய்யலாம். இதற்கு இடிசாம்பார் நல்ல செம்ம டேஸ்டியான சைடிஷ் ஆகும்.

5. திடீர் ரவை ஊத்தாப்பம்

ரவையில் தோசை, இட்லி செய்வது போலவே ஊத்தாப்பமும் செய்யலாம். இது தோசையைக் காட்டிலும் சிறிது தடிமனாக வரும். ஊத்தாப்பம் பிரியர்கள், ரவையில் செய்து புதியதொரு அனுபவத்தைப் பெறலாம்.

Post a comment

0 Comments