ஜெயலலிதாவின் வீட்டில் புத்தகங்கள்: திருக்குறலில் இருந்து டிஸ்கவரி ஆஃப் இந்தியா வரைஅரசுடைமையாக்கப்படும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தில், திருக்குறள் முதல் ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியா என 8,736 புத்தகங்கள் உள்ளது தெரியவந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வீட்டில் இருந்த 32,721 அசையும் பொருட்களில் 8,376 புத்தகங்களும் அடக்கும். அதில், திருக்குறள் முதல் ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியாவும், சுயசரிதை புத்தகங்கள் அடக்கம்.

இது தொடர்பாக ஜெயலலிதா வீட்டில் பணியாற்றிய ஒருவர் கூறுகையில், புத்தகங்களில்75 சதவீதம் ஆங்கில நூல்கள் தான். தமிழ் புத்தகங்கள் பலவும் ஈ.வெ.ராமசாமி மற்றும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையில் படைப்புகள். மேலும், திருக்குறள் மொழிபெயர்ப்பு, ஆதி சங்கரரின் புத்தகங்கள், கண்ணதாசனின் அர்த்தமுள்ள ஹிந்து மதம்,, தி டிஸ்கவரி ஆப் இந்தியா ஆப் இந்தியா புத்தகம் பாதுகாக்கப்பட்டது.

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா குறித்து எழுதப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், அகத்தா கிறிஸ்டியின் திகில் நாவல்கள் மற்றும் குஷ்வந்த் சிங்கின் நாவல்களும் இடம் பெற்றிருந்தன. தலைவர்களின் சுயசரிதைகளை ஜெயலலிதா விரும்பி படிப்பார். அந்த வகையில், ஆப்ரஹாம் லிங்கன், ரொனால்ட் ரீஹன் ஆகியோரின் புத்தகங்களும் உள்ளன. அந்த புத்தகங்களில் ஜெயலலிதா குறிப்புகளை எடுத்துள்ளார்.

தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் ஜெயலலிதா புத்தகங்களை வாசிப்பார். ஒவ்வொரு புத்தகத்திலும் 3 பிரதிகள் வாங்கப்பட்டு, போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட்டில் உள்ள நூலகங்களில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Post a comment

0 Comments