சமூக வலைப்பின்னல் தளங்களுக்கு தடை: மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சமூக வலைதலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க மத்திய , மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்துக்கள் மனம் புண்படும்படி, தொடர்ச்சியாக, கருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில், வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன.முருகப் பெருமானை போற்றி பாடப்படும், கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து, சமீபத்தில் வீடியோக்கள் வெளியிடப்பட்டன.இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, வேளச்சேரியைச் சேர்ந்த, செந்தில்வாசன், 49, போரூர் அடுத்த, ராமாபுரத்தைச் சேர்ந்த, சுரேந்திரன் நடராஜன் உட்பட, நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட வி வகாரத்தில், யுடியூப், பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த சார்லஸ் அலெக்சாண்டர் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில் சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரசாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் துவங்கி, கடவுள்கள் வரை அவமதிக்கப்படுகின்றனர். கடந்த 2018 ம் ஆண்டு சமூக வலைதளங்களை கண்காணிக்க மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளது. அதனை பின்பற்றி இருந்தால் சட்ட விரோத நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவி்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Post a comment

0 Comments