20 பாஜக, எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு: சித்ராமையாகர்நாடகாவில் 20 பா.ஜ., எம்.எல்.ஏக்கள் காங்., உடன் தொடர்பு கொண்டுள்ளனர் என காங். முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறினார்.

இது குறித்து கூறப்படுவதாவது: கர்நாடகா, ம.பி. மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது அக்கட்சியின் மீது அதிருப்தியில் உள்ள எம்.எல் ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பா.ஜ.,கட்சியில் சேருவதும் மாற்று அரசாக பா.ஜ., ஆட்சி அமைவதற்கும் துணை புரிந்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகா மற்றும் ம.பி.,யில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

இதனிடையே கர்நாடகாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநில பா.ஜ., தலைவர் நலின் குமார் கட்டீல் தன்னுடன் 15 காங்., எம்.எல்ஏக்கள் தொடர்பு கொண்டுள்ளதாக கூறினார். மேலும் மாநில சட்டமேலவை உறுப்பிரான சிபி யோகேஸ்வர் முன்னாள் முதல்வர் குமாரசாமி பா.ஜ. அரசை ஆதரித்து வருவதாக கூறினார்.

இந்நிலையில் காங்.,கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா பா.ஜ.,எம்.எல்.ஏக்கள் 20 பேர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார்.
மாநில காங்., தலைவர் சிவகுமார் ,பா.ஜ.,வின் சட்டமேலவை உறுப்பினர் சி.பி.,.யோகேஸ்வர் காங்.,கட்சியில் சேர விரும்புவதாக கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக அணுகியதாக தெரிவித்துள்ளார்.


Post a comment

0 Comments