மெஹபூபா முப்தியின் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்ததுஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி மீதான பொது பாதுகாப்பு சட்டக் காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆக.ல் விலக்கி கொள்ளப்பட்டது. அதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெஹபூபா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர் மீது மிகவும் கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆண்டு ஆக.,5ம் தேதி முதல் அரசு பங்களாக்களில் சிறை வைக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு ஏப்., மாதம் 7ம் தேதியில் இருந்து வீட்டுக் காவலில் உள்ளார். அவருடைய காவல் ஓராண்டை கடந்த நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு, அவரது வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்கள் மாநாட்டுத் தலைவர் சஜாத் லோன், ஒரு வருட காவலுக்கு இன்றும் 5 நாட்கள் உள்ள நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டார். வீட்டுக் காவலில் இருந்த முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் அவரது தந்தை பாரூக் அப்துல்லா ஆகியோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Post a comment

0 Comments