Type Here to Get Search Results !

கேரள தங்க கடத்தல் வழக்கில் சிவசங்கரிடம் 10 நாட்களில் விசாரணை



கேரள தங்க கடத்தல் வழக்கில், அம்மாநில முன்னாள் முதன்மை செயலர், சிவசங்கரனுக்கு உள்ள தொடர்பு குறித்து, 10 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும்' என, என்.ஐ.ஏ., மற்றும் சுங்கத்துறையினருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

மாநில தலைநகரான, திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு வந்த பார்சலில், துபாயில் இருந்து, 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது, சமீபத்தில் பிடிபட்டது.இதையடுத்து, சரித் குமார், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனமும், சுங்கத்துறையும் விசாரித்து வருகின்றன.ஸ்வப்னா சுரேஷுடன், கேரள முதல்வரின் முதன்மை செயலராக பதவி வகித்து வந்த, சிவசங்கருக்கு, நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

அவரிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள், 25 மணி நேரம் விசாரணை நடத்தினர். சுங்கத்துறை அதிகாரிகள், ஒன்பது நேரம் விசாரணை நடத்தினர்.'டிஜிட்டல் கேமரா'அப்போது, 'தன் உறவினரின் மனைவி என்ற முறையில், ஸ்வப்னாவை தெரியும். மற்றபடி அவருக்கு தங்க கடத்தலில் தொடர்பு இருப்பது குறித்து எதுவும் தெரியாது' என, சிவசங்கர் கூறினார்.இந்நிலையில், 'பொறுப்பான உயர் பதவியில் இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, சந்தேகத்தின் நிழலில் நீண்ட நாட்கள் வைத்திருக்ககூடாது.

கடத்தல் விவகாரத்தில், அவருக்கு உள்ள தொடர்பு குறித்து, 10 நாட்களுக்குள், விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும்' என, டில்லியில் உள்ள, மத்திய உள்துறை அமைச்சகம், நேற்று உத்தரவிட்டது.இதையடுத்து, கேரள சட்டசபை வளாகத்தில் கைப்பற்றப்பட்ட, கண்காணிப்பு கேமரா காட்சிகளை, விசாரணை அதிகாரிகள் ஆராய துவங்கி உள்ளனர். மேலும், ஸ்வப்னா வீட்டில் கைப்பற்றப்பட்ட, ஆறு 'மொபைல் போன்'கள், இரண்டு மடிக்கணினி, 'ஹார்ட் டிஸ்க்', 'டிஜிட்டல் கேமரா' உள்ளிற்றவற்றை ஆராயும் பணி, முடுக்கிவிடப்பட்டுஉள்ளது.சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் ஏன்?தங்க கடத்தல் வழக்கில், இரண்டாவது குற்றவாளியான, ஸ்வப்னா சுரேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று முன் தினம், விசாரணைக்கு வந்தது.ஸ்வப்னா தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் ஜோ பால், 'ஸ்வப்னாவை சுங்கத்துறை அதிகாரிகள் முதலில் கைது செய்த போது, அவர் மீது குற்றவாளி என, வழக்கு பதிவு செய்யவில்லை.

பின்னர், சில அரசியல் காரணங்களுக்காக, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.இதையடுத்து, 'ஸ்வப்னா மீது, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், எதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது' என, நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, என்.ஐ.ஏ., தரப்பு கூறியதாவது:தங்க கடத்தலில், ஸ்வப்னாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவரது உதவி இன்றி, இந்த கடத்தலை செய்திருக்க வாய்ப்பில்லை. இந்த வழக்கு குறித்த விபரங்களை சமர்ப்பித்தால், ஒவ்வொரு குற்றவாளிக்கும், தேச விரோத நடவடிக்கையில் உள்ள பங்கு குறித்து, இந்த நீதிமன்றம் தெரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு, கூறப்பட்டது.இதையடுத்து, வழக்கு விபரங்களை சமர்ப்பிக்குமாறு, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom