மோடி எளிமையான மனிதர்; நிறையவேலை செய்கிறார் : ராக்கி சகோதரி புகழாரம்பிரதமர் மோடி எளிமையான மனிதர் நிறையவேலை செய்கிறார் என புகழாரம் சூட்டி உள்ள ராக்கி சகோதரி இந்தாண்டு வாழ்த்து கடிதத்துடன் ராக்கி கயிறை தபாலில் அனுப்பிவைத்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த உமர் மொஷின் ஷாயிக் என்பவர், தனது திருமணத்துக்குப் பின்னர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார். டெல்லியில் வசித்து வரும் ஷாயிக் கூறுகையில், 'கடந்த 22 முதல் 23 ஆண்டுகளாக பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வருகிறேன். இந்த முறை அவருக்கு ராக்கி கட்டும் தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். அவர் நிறைய வேலை செய்கிறார் எளிமையான மனிதர் என புகழாரம் சூட்டினார்.

முதல்முறையாக ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்த போது மோடி அவர்களை சந்தித்தேன். அன்றைய தினம் முதல் இன்று வரை ரக்ஷாபந்தன் அன்று அவரை சந்தித்து வாழ்த்துக் கூறி வருகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை மூத்த சகோதரருடன் 'ராக்கி' கட்டுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதில் , நான் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த ஐந்து வருடங்கள் அவருக்கு மிகவும் சிறப்பாகச் செல்ல வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன், அவர் எடுத்த நேர்மறையான முடிவுகளை உலகம் முழுவதும் அங்கீகரிக்கிறது," என்று அவர் கூறினார்.

முத்தலாக் நடவடிக்கையை பாரட்டிய அவர் குர் ஆனிலும் , இஸ்லாத்திலும் முத்தலாக் வழங்கப்படுவதில்லை. பிரதமர் மோடியை தவிர வேறு யாரும் இந்த உறுதியான நடவடிக்கையைஎடுத்திருக்க முடியாது அவர் முஸ்லிம் பெண்களின் நலனுக்காக நல்லதொரு வேலைசெய்துள்ளார். என கூறினார்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார், இந்த நடவடிக்கை நல்லதா அல்லது கெட்டதா என்பதை வரும் நாட்கள் பதில் சொல்லும் என்றார்.


Post a comment

0 Comments