Type Here to Get Search Results !

இந்தியாவில் ஒரே நாளில் 19,906 பேருக்கு தொற்று: 410 பேர் பலி



நாட்டில், ஒரே நாளில், 19 ஆயிரத்து, 906 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,28,859 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 410 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டிய நிலையில், குணடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரே நாளில், நாடு முழுதும், 19 ஆயிரத்து, 906 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 28 ஆயிரத்து 859 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து, 03 ஆயிரத்து 051 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 லட்சத்து, 9 ஆயிரத்து 713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 410 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 095 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று (ஜூன் 27) வரை 82 லட்சத்து 27 ஆயிரத்து 802 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதில், 2 லட்சத்து 31 ஆயிரத்து 095 பரிசோதனைகள் நேற்று மட்டும் நடந்தது என தெரிவித்துள்ளது.

மாநில வாரியா பாதிப்பு விவரம்

பாதிப்பில், மஹா., முதலிடத்தில் உள்ளது. 1 லட்சத்து, 59 ஆயிரத்து 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 273 பேர் மரணமடைந்துள்ளனர்.
டில்லியில் 80 ஆயிரத்து 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 558 பேர் மரணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 78 ஆயிரத்து 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 25 பேர் மரணமடைந்துள்ளனர்.
குஜராத்தில் 30 ஆயிரத்து 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 ஆயிரத்து 789 பேர் மரணமடைந்துள்ளனர்.
உ.பி.,யில் 21 ஆயிரத்து 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 649 பேர் மரணமடைந்துள்ளனர்.
ராஜஸ்தானில் 16 ஆயிரத்து 944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 391 பேர் மரணமடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 16 ஆயிரத்து, 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 629 பேர் மரணமடைந்துள்ளனர்.
தெலுங்கானாவில் 13 ஆயிரத்து 436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 243 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஹரியானாவில் 13 ஆயிரத்து 427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 218 பேர் மரணமடைந்துள்ளனர்.
ம.பி.,யில் 12 ஆயிரத்து 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 550 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஆந்திராவில் 12 ஆயிரத்து 285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 157 பேர் மரணமடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் 11 ஆயிரத்து 923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 191 பேர் மரணமடைந்துள்ளனர்.
பீஹாரில் 8 ஆயிரத்து 931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 59 பேர் மரணமடைந்துள்ளனர்.
காஷ்மீரில் 6 ஆயிரத்து 966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 93 பேர் மரணமடைந்துள்ளனர்.
அசாமில் 6 ஆயிரத்து 816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஒடிஷாவில் 6 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 பேர் மரணமடைந்துள்ளனர்.
பஞ்சாபில் 5 ஆயிரத்து 056 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 128 பேர் மரணமடைந்துள்ளனர்.
கேரளாவில் 4 ஆயிரத்து 071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் மரணமடைந்துள்ளனர்.
உத்தர்கண்டில் 2 ஆயிரத்து 791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 பேர் மரணமடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் 2 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஜார்கண்டில் 2 ஆயிரத்து 339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் மரணமடைந்துள்ளனர்.
திரிபுராவில் ஆயிரத்து 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 பேர் மரணமடைந்துள்ளனர்.
கோவாவில் ஆயிரத்து 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் மரணமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் ஆயிரத்து 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கூட மரணமடையவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom