Type Here to Get Search Results !

விருதுநகரில் ராதிகா சரத்குமார், திருப்பூரில் முருகானந்தம்... தமிழக பாஜக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்

 தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் நிலையில், நேற்று 7 தொகுதிகளுக்கும், இன்று 13 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது.இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூன் 4ம் தேதி நடக்கிறது.இந்த நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவுகிறது.

பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி மேம்பாட்டுக் கழகம், அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியில் கூட்டணி அமைத்தன.

இதில் பாமகவுக்கு 10 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம், பாரதிய மக்கள் கல்வி மேம்பாட்டு சங்கம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் பாஜ சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தென் சென்னை - தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - நரசிம்மன், நீலகிரி (தனி) - எல்.முருகன், கோவை - அண்ணாமலை, நெல்லை - நாயனார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 4 கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. அதன்படி, தமிழகத்தில் 24 தொகுதிகளில் தாமரை சின்னத்திலும், 15 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் தங்கள் சின்னத்திலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் தமிழக பாஜகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ளது,

சிவகங்கை தொகுதியில் தேவநாதன்,

மதுரை - ராம சீனிவாசன்,

நாகப்பட்டினம் - ரமேஷ்

திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்,

வட சென்னை - பால் கனகராஜ்,

நாமக்கல்- கே.பி.ராமலிங்கம்,

திருப்பூர்- ஏ.பி.முருகானந்தம்,

பொள்ளாச்சி- வசந்தராஜன்,

சிதம்பரம்- கார்த்தியாயினி

தென்காசி- ஜான் பாண்டியன்

விருதுநகர்- ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom