Type Here to Get Search Results !

இந்தியா முழுவதும் கருப்புப் பூஞ்சை நோயக்கு 8,848 பேர் பாதிப்பு

 


இந்தியா முழுவதும் கருப்புப் பூஞ்சை நோயக்கு 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்த நோய் பாதிப்பில் குஜராத் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சிலா் கருப்புப் பூஞ்சை (மியூகோா்மைகோசிஸ்) நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் கருப்புப் பூஞ்சை நோயக்கு 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்த நோய் பாதிப்பில் குஜராத் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக குஜராத்தில் 2,281 பேர், மகாராஷ்டிரம் 2,000 பேர், ஆந்திரம் 910 பேர், மத்தியப்பிரதேசம் 720 பேர், ராஜஸ்தான் 700 பேர், கர்நாடகம் 500 பேர், தெலங்கானா 350, ஹரியானா 250, தமிழகத்தில் 48 பேர் உள்பட 24 மாநிலங்களில் கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஆம்ஃபோடெரிசின்-பி மருந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. சில மாநிலங்களில் அந்த மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவுவதை அடுத்து 23,680 குப்பிகள் ஆம்ஃபோடெரிசின்-பி மருந்தை மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

நடப்பு மாதத்தில் 3,63,000 மருந்துக் குப்பிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலமாக உள்நாட்டு உற்பத்தியையும் சோத்து 5,26,752 மருந்துக் குப்பிகள் கையிருப்பில் இருக்கும் என்றும், ஜூன் மாதத்தில் 3,15,000 ஆம்ஃபோடெரிசின்-பி மருந்துக் குப்பிகள் இறக்குமதி செய்யப்படும் என்றும், உள்நாட்டு உற்பத்தியுடன் சோத்து 5,70,114 மருந்துக் குப்பிகள் கையிருப்பில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom