Type Here to Get Search Results !

ஜல்லிக்கட்டுக்கு தடையாக இருந்தது காங்கிரஸ்.. இதற்கு திமுகவும் உடைந்தை... உண்மையை போட்டுடைத்த பிரதமர் மோடி..!


இந்த மதுரை மண்ணில் தான் பெண்களுக்கு அளிக்கும் மரியாதையை பார்க்கிறோம். ஆனால், பெண்களை அவமானப்படுத்துவது காங்கிரஸ், திமுகவின் இயல்பு என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை பாண்டி கோயில் சாலையில் உள்ள அம்மா திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்;- திமுக, காங்கிரஸ் கட்சியிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அவர்கள் பொய் சொல்வதில் கெட்டிக்காரர்கள் . இவர்கள் பொய் சொல்வதை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் முட்டாள்கள் இல்லை. தமிழகத்தின் பண்டாடு, கலாசாரத்தின் பாதுகாவலர்களாக சித்தரிக்கிறார்கள். ஆனால், 2011ல் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. காங்கிரஸ் அமைச்சர் ஒருவர், சுற்றுச்சூழல் துறையை கவனித்தவர், ஜல்லிக்கட்டு என்பதுகாட்டுமிராண்டிதனமான விளையாட்டு எனக்கூறினார். பல நூற்றாண்டுகளாக இருந்த ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டி எனக்கூறினால் என்ன அர்த்தம்.

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், ஜல்லிக்கட்டை முழுமையாக தடை செய்வோம் எனக்கூறியது. இதற்காக திமுக காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும். தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு வேண்டும் எனக்கூறிய போது, அதிமுக கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கிடைக்க மத்திய அரசு உதவி செய்தது. பொறியியல், மருத்துவ கல்வியில் தாய்மொழி வழியில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வேலை செய்யாமல் இருப்பது, அடுத்தவர்கள் வேலை செய்தால் அதனை குறை கூறி இட்டு கட்டுவதில் காங்கிரசும், திமுகவும் பயிற்சி பெற்றுள்ளன. 

மதுரையில் எய்ம்ஸ் கொண்டு வருவது குறித்து காங்கிரஸ், திமுக சிந்திக்கவில்லை. அதனை கொண்டு வந்தது பாஜக உலக தரம், தொற்றுநோய்க்கு ஒரு பிரிவுடன் சர்வதேச தரத்துடன் அமைய உள்ளது. இந்த திட்டம், விரைவாக நிறைவேற்றப்படும். இதன் மூலம் இப்பகுதி மக்கள் சர்வதேச சிகிச்சை கிடைக்க உறுதி செய்வோம்.

திமுகவும், காங்கிரசும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு எந்த விஷயமும் செய்யாத கட்சிகள். அவர்களின் கண்ணியத்தை மீட்டெடுத்தது அதிமுகவும் பாஜகவும் தான். திமுக காங்கிரசார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். மதுரை மக்கள் அமைதியை விரும்பியபோது. அவர்களின் குடும்ப பிரச்னை காரணமாக மதுரையை வன்முறை நகரமாக, கொலைநகராமாக மாற்றினார்கள் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom