மதிமுகவும் தனி சின்னத்தில் போட்டி.... திட்டவட்டம்

 

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக, அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சியுடன் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில், மதிமுகவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை திமுக நடத்தி முடித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "திமுக, மதிமுக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது.

அந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். சட்டபேரவைத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்திலேயே போட்டியிடும்" என்று மல்லை சத்யா தெரிவித்தார். அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கட்சி திமுக கூட்டணியில் 3 தொகுதியில் போட்டியிடும் சூழலில், அக்கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் மதிமுகவும் தனி சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.

Post a comment

0 Comments