திமுக எம்பி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேச்சு.. ‌‌‌!

 

திமுகவை சேர்ந்த 3 எம்பிக்கள், முக்கிய மத்திய அமைச்சர்களை அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்களாம்.. இப்படி ஒரு தகவலை ஓரிரு செய்தித்தாள்கள் இன்றைய தினம் கசிய விட்டுள்ளன.. எனினும் இது உண்மையா என்று தெரியவில்லை.

வழக்கமாக திமுக, அதிமுகவை பற்றின உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தினந்தோறும் சோஷியல் மீடியாவில் வலம் வரத்தான் செய்யும்.. ஆனால், அவைகளின் நம்பகத்தன்மை குறித்து எதுவும் தெரியவதில்லை.. அந்த வகையில்தான் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

திமுகவை சேர்ந்த 3 எம்பிக்கள் சில மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வருகிறார்கள்.. இதில், ஒரு அமைச்சர் முன்னாள் மத்திய அமைச்சராம்.. இவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியையும், இன்னொரு திமுக எம்பி மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையும், மற்றொரு திமுக எம்பி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசுகிறார்கள்.

எதற்காக இந்த சந்திப்பு என்றுதான் தெரியவில்லை.. ஒருவேளை தங்களின் தொழில் தொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்தித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.. அல்லது திமுக ஆட்சி அமைக்க நேர்ந்தால், மத்திய அமைச்சரவையில் சேருவது தொடர்பாகவும் இவர்கள் பேசியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அல்லது மரியாதை நிமித்தமான சந்திப்பாகவும் இருக்கலாம் என்று தெரிகிறது.

எது எப்படி இருந்தாலும், தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால், இந்த மாதிரி நேரத்தில் 3 எம்பிக்கள், முக்கிய பாஜக புள்ளிகளை சந்திப்பது பல்வேறு யூகங்களை மட்டுமல்ல, பரபரப்பையும் சேர்த்து கிளப்பி வருகிறது!

Post a comment

0 Comments