Type Here to Get Search Results !

ஒரு செங்கலை தூக்கிய திமுக திருடன்.... மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் என்ன நிலையில் உள்ளது......?



நம் பாலிடாயில் ஒரு செங்கலை தூக்கி காண்பித்து எய்ம்ஸ் மருத்துவமனையை எடுத்து வந்துள்ளதாக சொல்ல, டூ ஹன்றட் ரூபீஸ்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றன.  

சரி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் என்ன நிலையில் உள்ளது  ?

Japan International Cooperation Agency (JICA) எனும் ஜப்பானிய நிதி நிறுவனத்திடம் கடன் பெற்றுதான் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. JICA 85 சதவீமும், இந்திய அரசு 15 சதவீதமும் இந்த திட்டத்திற்கு முதலீடு செய்யும். 

204.36 ஏக்கர் நிலம் மத்திய அரசால் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  மருத்துவமனை பகுதிக்கு புத்தம் புதிய நாலு வழி சாலையும் போடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஐந்தறை கிலோமீட்டருக்கு பத்தடி உயர சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு விட்டது. 

முதலில் 1264 கோடிகள் முதலீட்டில் முடிக்க இருந்த பணிகள் தற்போது மேலும் பல வசதிகளை இங்கு உருவாக்கப்பட திட்டமிடப் பட்டுள்ளதால், திட்ட மதிப்பு 2000 கோடிக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.  அதன்படி தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்கான ஒரு பெரும் வளாகமும் கூடுதலாக கட்டப்பட உள்ளது.

மேலும் மிகப்பெரிய திட்டங்களை பொறுத்த வரை, ஆய்வுப் பணிகள், திட்டமிடல், வரைவுகள், பலவிதமான ஆலோசனைகள் ஆகியன பின்புலத்தில் நடத்தியாக வேண்டும். அவை மதுரை எய்ம்ஸுக்கும் நடைப்பெற்று கொண்டுதான் உள்ளது. மேலும் இத்தகைய பணிகள் திட்டமிட்டது போல் முடிக்க முடியாமல் கூடுதல் காலம் பிடிப்பது இயற்கையே. பன்ஹ்சாப் பதிண்டாவில் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் 21 மாதங்கள் தாமதமாகிய நிலையில் தற்போது முழு வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது.

இதன் அடிப்படைகள் கூட தெரியாமல் சினிமா நடிகை கிடைக்கவில்லை என்று பாலிடாயில் குடித்த ஒரு பழம், செங்கலை காட்டி ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறது. அதற்கு சிரிப்பதற்கு ஒரு கூட்டம்.

வீராணம் திட்டம் என்று கூறி தமிழகம் எங்கும் குழாய்களை வீசி, கடைசி வரை அந்த திட்டத்தை நிறைவேற்றாமல், ஒதுக்கப்பட்ட பல கோடி பணத்தை ஆட்டை போட்ட திமுகவுக்கு, 

கூவத்தை சுத்தம் செய்கிறேன் என்று அந்த காலத்திலேயே 3 கோடி ஒதுக்கி, அதன் பின் முதலை உள்ளது என செய்தியை பரப்பி, பின் முதலையை பிடிக்க 3 கோடி ஆனது என்று பணத்தை ஆட்டை போட்ட திமுகவுக்கு,

மிகப்பெரும் சுகாதார நிலையம் அமைக்கிறேன் என்று அடிக்கல்லை மட்டும் கணிமொழியால் நடப்பட்டு, கடைசிவரை அது அடிக்கல்லாகவே இருக்கச் செய்த திமுகவுக்கு,

இப்படி பல பல திட்டங்களை தொடங்கி, நிறைவேற்றாமல் ஆட்டய போட்ட திமுகவுக்கு, மற்றவர்களையும் அதே பார்வையில் அல்லவா பார்க்கத் தோன்றும் ? 

மோடி செய்வதைதான் சொல்வார். சொல்வதைதான் செய்வார். 

தற்போது கொரானா பேரிடரால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்க, ஸ்டாலின் போன்ற கோடீஸ்வரர்கள் தங்களுக்கு சொந்தமான காவேரி அதிநவீன மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள, கோடிக்கணக்கான ஏழை மக்களை யார் கவனிப்பார்கள் ? 

கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணியில் மோடிஜியும், பாஜக அரசும் தற்போது முழு கவனமாக உள்ளது. மக்களின் பிரச்சனை குறித்து கவலை இல்லாமல். எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது என சுற்றிலும் ஏக்கர் கணக்கில் இடத்தை வாங்கிப் போட்டுள்ள திமுக ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் அவசரத்திற்கு எல்லாம் அரசு அடிபணியாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom