Type Here to Get Search Results !

கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்று மூன்றாவது அணி உதயம்....!

 

கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்று மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கிறது என சரத்குமார் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே. கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என சரத்குமார் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்துடன், சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது.


மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும். கொள்கை ரீதியாக ஒன்று சேர்கிறோம். மக்களுக்காக சிந்திக்க வேண்டும்.

ஓட்டுக்காக சிந்திக்க கூடாது. சமத்துவம் இல்லையென்றால் நாடு வீணாய் போகும் எனத் தெரிவித்தார். கடந்த வாரம் கமலை சந்தித்து கூட்டணி குறித்து சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது கூட்டணி உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.