Type Here to Get Search Results !

12 லட்சம் ஏக்கர் நிலம் உங்களுக்கே... தமிழகத்தில் பாஜக கொடுத்த தேர்தல் அறிக்கை..!


மீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படும் என தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. இதில் பா.ஜ.க 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அதன்படி பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரிலான பாஜக தேர்தல் அறிக்கையை  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.  அதில், 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்கப்படும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். 18 முதல் 23 வயது வரை உள்ள இளம்பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம். 50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கீட்டுடன் தனு பட்ஜெட். சென்னை மாநகரம்  3 மாநகராட்சிகளாக பிரிக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு ஆற்று படுகையில் மணல் அள்ள தடை. தமிழகத்தில் மீண்டும் சட்டம் மேலவை கொண்டு வரபப்டும். ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே வந்து விநியோகிக்கப்படும். மீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படும் . 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும். தமிழகம் முழுவதும் தேவையான அளவு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்; விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom