Type Here to Get Search Results !

3 தலைவர்களை கெளரவிக்கும் தமிழக அரசு... எடப்பாடியார்...!


நாட்டுக்காக பல்வேறு வகையில் பாடுபட்ட தலைவர்களை கெளரவிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு செயல்களை செய்து வருகின்றன. சிலை திறப்பு, பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையத்திற்கு தலைவர்களின் பெயரை சூட்டுவது, நினைவு தூண்கள், வளைவுகள் அமைப்பது என சொல்லிக்கொண்டே செல்லலாம். அந்த வகையில் தமிழக அரசு நமக்காக பாடுபட்ட தலைவர்களை கெளரவிக்கும் விதமாக அவர்களது படங்கள், சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுகின்றன. 

அந்த வகையில் வ.உ.சிதம்பரனார், ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி செட்டியார் ஆகியோரது புகைப்படங்கள் சட்டப்பேரவையில் வைக்கப்படும் என கடந்த ஆண்டு சிவகங்கையில் நடந்த கொரோனா ஆய்வு கூட்டத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.முதன் முறையாக 1948ம் ஆண்டு மகாத்மா காந்தியின் உருவப்படத்தில் தொடங்கி, 2018ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்பட திறப்பு வரை 12 தலைவர்களின் படங்கள் சட்டப்பேரவையில் இடம் பெற்றுள்ளன. 

தற்போது வரும் பிப்ரவரி 23ம் தேதி அன்று வ.உ.சிதம்பரனார், சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் ஆகியோரது திருவுருப்படத்தை வரும் 23ம் தேதி மாலை 5.30 மணி அளவில் திறக்கப்பட உள்ளன. இதனால் தமிழக சட்டப்பேரவையில் உள்ள தலைவர்கள் உருவப்படங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்க உள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom