Type Here to Get Search Results !

விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில்... எதிர்க்கட்சி தூண்டுதலில் வன்முறை...!


வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் போராட்டத்தை 1 மாதத்துக்கு மேலாக தொடர்ந்து வருகின்றனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு விவசாயிகளுடன் ஏற்கனவே நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

தற்போது 29-ந்தேதி (நாளை) பேச்சுவார்த்தை நடத்துமாறு அரசுக்கு பரிந்துரைத்திருக்கின்றனர். அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) அரசுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படும் எனவும், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கவலைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன.

இதற்கிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானாவில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அரியானாவில் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை நேற்றும் விவசாயிகள் எதிர்க்கட்சி தூண்டுதலில் முற்றுகையிட்டனர். இதனால் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பஞ்சாப்பில் தொழிலதிபர்களான அதானி, அம்பானி போன்றவர்களின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சொந்தமான செல்போன் கோபுரங்களை விவசாயிகள் சேதப்படுத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களால் பெருநிறுவனங்களுக்கே லாபம் என குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், தங்கள் கோபத்தை அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளின் மீது காட்டுவதாக பஞ்சாப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு நேற்று முன்தினமும், நேற்றுமாக மாநிலத்தில் ஏறக்குறைய 176 செல்போன் கோபுரங்களை அவர்கள் சூறையாடி சேதப்படுத்தி உள்ளனர். அங்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் இருந்த ஊழியர்களையும் விவசாயிகள் தாக்கி உள்ளனர். இந்த 176 கோபுரங்களையும் சேர்த்து இதுவரை 1,411 செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

விவசாயிகளின் வன்முறையால் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் மாநிலத்தில் செல்போன் சேவைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.

விவசாயிகள் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என முதல்-மந்திரி அமரீந்தர் சிங் கடந்த 25-ந்தேதி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவரது வேண்டுகோளையும் ஏற்காமல் விவசாயிகள் எதிர்க்கட்சி தூண்டுதலில் தொடர்ந்து வன்முறையில் இறங்கி வருகிறார்கள்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி (மன்கீ பாத்) வரும் பிரதமர் மோடி, இந்த மாதத்துக்கான உரையை நேற்று நிகழ்த்தினார். இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, பஞ்சாப், அரியானாவில் நேற்று விவசாயிகள் மோடியின் உரை ஒலிபரப்பான நேரத்தில் எதிர்க்கட்சி தூண்டுதலில் வன்முறையில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

பஞ்சாப், அரியானா மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் இந்த எதிர்ப்பு குரல் எழுப்பும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல இடங்களில் பொதுமக்களும் விவசாயிகளுடன் சேர்ந்து எதிர்க்கட்சி தூண்டுதலில் வன்முறையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

AthibAn Tv

Top Post Ad

Below Post Ad

Ads Bottom