Type Here to Get Search Results !

2021-ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். இந்தியாவில் தலா 1 பூரண சூரிய கிரகணமும், பூரண சந்திர கிரகணமும் ஏற்படும்


மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயினியில் உள்ள ஜிவாஜி ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர பிரகாஷ் குப்த், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

* 2021-ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். தலா ஒரு பூரண சூரிய கிரகணமும், பூரண சந்திர கிரகணமும் ஏற்படும்.

* மே மாதம் 26-ந் தேதி சந்திரகிரகணம் நிகழும். இது மேற்கு வங்காளம், கடலோர ஒடிசா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் தெரியும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வருகிறபோது பூரண சந்திரகிரகணம் ஏற்படுகிறது.

* ஜூன் மாதம் 10-ந் தேதி வருடாந்திர சூரிய கிரகணம் நிகழும். அப்போது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும். இது 94.3 சதவீதம் சூரியனை மூடி, நெருப்பு வளையமாக காணப்படும். ஆனால் இந்தியாவில் இதை பார்க்க முடியாது.

* நவம்பர் 19-ந் தேதி பகுதி சந்திர கிரகணம் ஏற்படும். இதை அருணாசல பிரதேசம் மற்றும் அசாமின் சில பகுதிகளில் குறுகிய நேரத்துக்கு பார்க்க முடியும்.

* டிசம்பர் 4-ந் தேதி பூரண சூரிய கிரகணம் ஏற்படும். சந்திரனின் 97.9 சதவீதம், பூமியின் நிழலால் மூடப்பட்டிருக்கும். இந்த பூரண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom