Type Here to Get Search Results !

'' 2ஜி வழக்கு வேகமெடுப்பதால் கனிமொழி உளறுகிறார்'' பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை



'' 2ஜி வழக்கு வேகமெடுப்பதால் கனிமொழி உளறுகிறார்'' என பா.ஜ. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறினார்.

மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்து பா.ஜ. சார்பில் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அவல்பூந்துறையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ. மாநில துணை தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசாக மத்திய அரசும் விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை ஆதரிக்கும் அரசாக தமிழகமும் உள்ளது. அ.தி.மு.க.- பா.ஜ. கூட்டணியில் விரிசல் இல்லை.

அண்ணா பல்கலை விவகாரத்தில் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது முட்டாள்தனமானது. எதையும் ஆராய்ந்து பார்க்காமல் சம்பந்தமில்லாமல் பேசுவது உளறுவது தெளிவில்லாததே அக்கட்சியின் நிலைப்பாடாக தொடர்ந்து உள்ளது. 2ஜி வழக்கில் மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவில்லை. வழக்கு வேகமெடுப்பதால் கனிமொழி அச்சத்தில் உளறுகிறார்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.