Type Here to Get Search Results !

எல்லையில் டாங்குகள், பீரங்கிகளை நிறுத்தியுள்ள இந்திய ராணுவம்



லடாக்கில் சீன எல்லையில் கடந்த 5 மாதங்களாக பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு பாதுகாப்பை பலப்படுத்தவும் 14,500 அடி உயரத்தில் லடாக்கின் கிழக்குப்பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், டாங்கிகள், பீரங்கிகளை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. மேலும், எல்லையை ஒட்டிய பகுதியில் முகாம்கள் மற்றும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணியில் இந்திய வீரர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர்.

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் , லடாக்கின் கிழக்கே உள்ள சுமர் - டெம்சோக் பகுதியில், ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ள சீன ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கு டி 90 மற்றும் டி 72 டாங்குகளுடன் பிஎம்பி-2 ரக பீரங்கிகளையும் நிறுத்தியுள்ளது. இந்த பீரங்கிகளை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் இயக்க முடியும்.

குளிர்காலத்தில், லடாக்கின் கிழக்கு பகுதியில் வெப்பநிலையானது மைனஸ் 35 டிகிரி வரை செல்வதுடன், அதிகளவு பனிக்காற்றும் வீசும். லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள இந்தூஸ் நதியில் பாயும் வெள்ளத்தை தாண்டியும், பல்வேறு தடைகளை மீறியும் இந்திய டாங்குகள், கொண்டு வரப்பட்டுள்ளன.இந்திய ஆயுதப்படைகள், இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை விரைவில் செல்லும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, கடந்த ஆக.,2 9- 30 தேதிகளில் பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறிய போது, இந்திய வீரர்கள் உடனடியாக அங்கு சென்றனர்

இது தொடர்பாக ராணுவ மேஜர் ஜெனரல் அர்விந்த் கபூர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: டாங்குகள், பீரங்கிகள் மற்றும் கனரக துப்பாக்கிகளை இந்த பகுதியில் பராமரிப்பது என்பது சவாலான விஷயம். வீரர்கள் மற்றும் ஆயுதங்களை தயாராக உள்ளதை உறுதி செய்ய, ஆட்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்காலம், லடாக்கில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்பது மறுக்க முடியாதது. இந்த சவலை சந்திக்கும் வகையில், ரேசன் பொருட்கள், எரிபொருள், உடைகள், டென்ட்கள் உள்ளிட்டவையுடன் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom