Type Here to Get Search Results !

வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது: பிரதமர்



தமிழகத்தில் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:
*நமது முன்னோர்கள் ஏற்படுத்தி இருந்த நெறிமுறைகள் இன்று எத்தனை தேவையானதாகவும், மகத்துவம் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன என்பது அவை இல்லாதபோது இன்று நமக்கு உரைக்கிறது.

*மனித நாகரீகம் எத்தனை தொன்மையானதோ, அதே அளவுக்கு தொன்மையானது கதைகளின் வரலாறும்.

*எங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையும் உண்டு. கதைகள், மனிதர்களின் படைப்பாற்றலையும் புரிந்துணர்வையும் முன்னுறுத்துகினறன. கதை சொல்லுவது என்ற ஒரு வளமான பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள் நாம்.

*நாம் ஹிதோபதேசம், பஞ்சதந்திரம் போன்ற பாரம்பரியம் உடையவர்கள் என்பது நமக்கு பெருமிதம் அளிக்கும் விஷயம். இவற்றின் மூலம் விவேகம், புத்திக்கூர்மை நிறைந்த விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

*நம் நாட்டில், பல வகையான நாட்டுப்புறக் கதைகள் புழக்கத்தில் உள்ளது. தமிழகம், கேரளாவில் கதைகள் சொல்லும் மிக சுவாரசியமான பாணி உள்ளது. இதனை வில்லுப்பாட்டு என அழைக்கிறோம். இதில், கதைகளும், இசையும் என்ற மிகக் கவர்ச்சிகரமான இணைவு காணப்படுகிறது.

*இப்போதெல்லாம் இணையவழியில் கதை சொல்லும் பாணி உருவாகியுள்ளது.

*தமிழக்தை சேர்ந்த வித்யா வீரராகவன், கீதா ராமானுஜன் ஆகியோர் இதில் ஈடுபட்டுள்ளனர். கண்டிப்பாக, அவர்களை பற்றி சமூக ஊடகங்களில் பகரிந்து கொள்ளுங்கள்.

*நமது நாட்டின் புதிய தலைமுறையினருக்கு நமது மகத்தான மனிதர்கள், மகத்தான தாய்மார்கள்- சகோதரிகளைப் பற்றி கதைகள் மூலம் தெரிவித்து, அவர்களோடு இணைந்து இந்தக் கதை சொல்லுதல் கலையை எவ்வாறு பிரபலபடுத்துவது என்பதை அறிய வேண்டும்

*வீடுகள் தோறும் நல்ல கதைகள் சொல்லப்பட வேண்டும். நல்ல கதைகளை குழந்தைகள் கேட்க வேண்டும். இவ்வாறு செய்தால் மக்கள் அனைவருக்கும் பெரும்உபயோகரமாக இருக்கும். இப்படிப்பட்டதொரு சூழலை எப்படி ஏற்படுத்துவத என்ற திசையில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

*ஒவ்வொரு குடும்பமும் வாரத்தில் ஒரு நாள் ஒன்றாக அமர்ந்து குழந்தைகளுக்கு கதை சொல்லாம். சுதந்திர போராட்டத்தில் இந்தியா சந்தித்த பிரச்னைகளை கதைகள் மூலம் எடுத்துரைக்க வேண்டும்

*கருணை, புரிந்துணர்வு, பராக்கிரமம், தியாகம், வீரம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தலைப்பை தேர்வு செய்து குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கொரு கதையை கூற வேண்டும்.

*நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாட இருக்கிறோம். நாம் அடிமைப்பட்டுக் கிடந்த இருண்ட காலகட்டம் தொடர்பான உத்வேகம் அளிக்கும் சம்பவங்களை உங்கள் கதைகள் வாயிலாக பிரசாரம் செய்ய முடியுமா? குறிப்பாக 1857 முதல் 1947 வரையிலான அனைத்து சிறிய பெரிய சம்பவங்களை நமது புதிய தலைமுறையினருக்கு கதைகள் வாயிலாக அறிமுகப்படுத்தலாம்.

*நாட்டின் வேளாண்துறை நமது விவசாயிகள், நமது கிராமங்கள் ஆகியன சுயசார்பு இந்தியாவின் ஆதாரங்கள். இவை வலுவாக இருந்தால் தான் சுயசார்பு இந்தியாவின் அஸ்திவாரம் பலமாக இருக்கும்.

*யார் நிலத்தில் வலுவாக கால் பதித்திருக்கிறார்களோ அவர்கள் எந்த புயலையும் எதிர்கொள்ளும் உறுதிப்பாட்டோடு விளங்குவார்கள்

*கொரோனாவின் இந்த கடினமான இந்த வேளையில் நமது விவசாயத்துறையில், நமது விவசாயிகள் இந்த உறுதிப்பாட்டிற்கான உயிர்ப்புடைய எடுத்துக்காட்டுகள்.

*பகத் சிங்கின் பிறந்த நாள் நாளை கொண்டாட உள்ளோம். மக்களுடன் இணைந்து நானும் பகத் சிங்கிற்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தைரியம் மற்றும் தியாகத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். பகத் சிங்கின் தேசப்பற்றை முன்னுதாரணமாக வைத்து நாட்டிற்காக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீபத்தை நம் மனதில் ஏற்றி, அதன் வழியில் பயணிப்போம்.

*அக்., 2 ஆனது நமக்கு தூய எண்ணங்களை தரும் நாட்களாக உள்ளது. அன்னை இந்தியாவின் சிறந்த இரண்டு மகன்களான மஹாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரியை நினைவில் கொள்வோம். மஹாத்மா காந்தியின் எண்ணங்களும் கருத்துகளும் இன்றும் பொருந்துவதாக உள்ளது.

*மஹாத்மா காந்தியின் பொருளாதார கருத்துகளின் உணர்வினை நாம் புரிந்து கொண்டு அந்த பாதையில் பயணித்திருந்தால், இன்று சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கான தேவை ஏற்பட்டிருக்காது. மஹாத்மாவின் பொருளாதார சிந்தனையில் பாரதத்தின் நாடி நரம்புகளை பற்றிய புரிதல் இருந்தது. அதில் இந்தியாவின் மனம் கமழ்ந்தது. நமது அனைத்து செயல்களும் பரம ஏழைகளுக்கும் நலன் ஏற்படுத்துவனவாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதை தான் மஹாத்மாவின் வாழ்க்கை வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது.

*தமிழகத்தில் விவசாயிகள் கூட்டுறவு அமைப்பு மூலம் வாழை காய்கறிகள் கொள்முதல் செய்தனர்.

*வாழை மற்றும் காய்கறிகளை கொள்முதல் செய்து சென்னை நகருக்கு அனுப்பி வைத்தனர்

*கொரோனா பிரச்னை காலகட்டம், குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பை அதிகப்படுத்தியுள்ளதுடன், அவர்களின் நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

*லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கை, பணிவு மற்றும் எளிமை பற்றிய செய்தியை நமக்களித்து செல்கிறது.

*அக்., 11 என்பது நமக்கெல்லாம் மிகவும் விசேஷம் நிறைந்த ஒன்றாகும்.

*இந்த நாறன்று தான், பாரத் ரத்னா லோக்நாயக் ஜெய் பிரகாஷ் அவர்களை, அவர்களுடைய பிறந்த நாளன்று நாம் நினைவில் கொள்வோம். ஜெய்பிரகாஷ், நமது ஜனநாயக விழுமியங்களைக் காக்க முதன்மையான பங்குப்பாணி ஆற்றியிருக்கிறார்.

*கொரோனா பீடித்திருக்கும் இந்த காலகட்டத்தில் அனைவரும் மாஸ்க் அணியுங்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நான் அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளி என்ற விதிமுறை உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தாரையும் காக்க வல்லது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom