Type Here to Get Search Results !

7 மசோதாக்கள் மூன்றரை மணி நேரத்தில் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டன



மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லி., கூட்டத்தொடரை எதிர்கட்சிகள் புறக்கணித்ததால், ராஜ்யசபாவில் மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குரல் ஓட்டெடுப்பு மூலம், ராஜ்யசபாவில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆத்திரம் அடைந்து, கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நசீர் ஹூசைன் மற்றும் இளமாறன் கரீம் ஆகிய 8 பேரும், மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி எம்.பி.,க்கள், உத்தரவை திரும்ப பெறும் வரை பார்லி., கூட்டத்துக்கு வரப்போவது இல்லை என இன்றைய கூட்டத்தொடரை புறக்கணித்தன. எதிர்கட்சிகள் இல்லாத நிலையில், மூன்றரை மணி நேரத்தில் ராஜ்யசபாவில், 7 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இம்மசோதாக்கள், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டு, அவர் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் சட்டமாகும்.

நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்:

* அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா
* புதிதாக உருவாக்கப்பட்ட 5 ஐஐடிக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மசோதா
* வங்கி ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா
* குறிப்பிட்ட குற்றங்களுக்கு அபராதங்களை நீக்கும் நிறுவனங்கள் திருத்த மசோதா
* தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா
* ராஷ்ட்ரிய ராகாஷ் பல்கலைக்கழக மசோதா
* வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom