"ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்" - கொச்சி வந்திறங்கிய நயன் மற்றும் விக்னேஷ்..!


நானும் ரௌடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதிலிருந்து, நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் மிகவும் நெருக்கமாக பழகிவருகின்றனர். இருவரும் காதலிப்பதாக வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், அதனை உறுதி செய்யும் விதமாக, வெளிநாடு, கோவில், சுற்றுளா, விருது விழா என எங்கு சென்றாலும் இருவரும் ஜோடியாகவே செல்வது மற்றும் மிக நெருக்கமான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகவும் ஆதலால் அவர்கள் தனிமையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தனது ட்வீட் மூலம் அதற்கு அப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்னேஷ் சிவன் மற்றும் நயன். அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "எங்களுக்கு கொரோனா இருக்கிறது என்று கூறி வெளியாகும் செய்திகளை கண்டு நகைப்பாக உள்ளது. நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நலமுடன் இருக்கிறோம் என்று அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

தற்போது இன்று இந்தியா முழுவதும் ஓணம் பண்டிகை பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இன்றி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் விமான மூலம் கொச்சி சென்றுள்ளார். அங்கு அவர்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட உள்ளனர். விமானத்தில் பறக்கும் காணொளி ஒன்றையும் கொச்சியில் தரையிறங்கிய ஒரு புகைப்படத்தையும் நயன்தாரா தற்போது வெளியிட்டுள்ளார்..


Post a comment

0 Comments