அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் ஜெயக்குமார் பேசுவது சரியல்ல
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் ஜெயக்குமார் பேசுவது சரியல்ல என பா.ஜ., தேசிய பொது செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறும் போது, கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு''என டுவிட்டரில் பதிவிட்டிரந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை உரசி பார்க்கக்கூடாது. எச்.ராஜா சொன்ன சொற்கள் அவருக்கு தான் பொருந்தும் என பதிலடி கொடுத்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் அளித்த பேட்டி ஒன்றில், டில்லிக்கு பா.ஜ., ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் இன்னும் வளர வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறியதாவது: எல்லை மீறி பேசுவதும் கூட்டணியில் பிரச்னை ஏற்படுத்தும். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் பேசுவது சரியல்ல. அதிமுக அரசை நான் விமர்சனம் செய்வது கிடையாது. தோழமை சுட்டுதலோடு குறைகளை சொல்கிறேன். தமிழகத்தில் பா.ஜ., ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது. எங்களுடைய தேர்தல் பணி நாடு முழுவதும் இருப்பதை போல், தமிழகத்திலும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a comment

0 Comments