Type Here to Get Search Results !

சீனாவுக்கு சொந்தமான ஆளில்லா தீவுகளை வாடகைக்கு விடுவதாக அறிவிப்பு




சீனாவின் வடகிழக்கில் உள்ள லியோனிங் மாகாணம், தனக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்காத தீவுகளை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளது.லியோனிங் மாகாண நிதி மற்றும் இயற்கை வளத்துறை , கடந்த ஜூலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

தீவுகளுக்கான பயன்பாட்டு கட்டணங்களை குறிப்பிடும் அந்த அறிக்கை இந்த வாரம் சீன சமூக ஊடகங்களில் பரவலாக பரவியது. சீனாவின் பெரும்பாலான தீவுகளும் அரசாங்கத்திற்கு சொந்தமானவை என்றாலும், அவை தனிநபர்களுக்கு குத்தகைக்கு விடப்படலாம். ஆண்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு 3,700 யுவான் என்று சீன அரசின் ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

லியோனிங் மாகாணத்தில் மொத்தம் 633 தீவுகள் உள்ளது. அவற்றில் 44 தீவுகள் மனிதர்கள் வசிக்காத தீவுகள், மீதமுள்ள 589 தீவுகள் காலியாக உள்ளது. சில தீவுகள் மஞ்சள் கடலில் கரையோரத்தில் அமைந்திருந்தாலும், பல யலு ஆற்றின் குறுக்கே சிதறிக்கிடக்கின்றன. அவை லியோனிங் மாகாணத்தை அண்டை நாடான வட கொரியாவிலிருந்து பிரிக்கின்றன.லியோனிங்கின் தலைநகரான ஷென்யாங், பீஜிங்கில் இருந்து கிழக்கே 430 மைல் தொலைவில் உள்ளது.

சமீபகாலமாக, இப்பகுதியில் கடல் வளங்கள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. மேலும் சில தீவுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கடல் பிரதேசங்கள் சரியாக பயன்படுத்தப்படவில்லை என ஜின்ஹூவா கூறியுள்ளது. அதிகபட்சமாக தீவுகளுக்கு ஆண்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு 25 மில்லியன் யுவான் வரை செலவாகும். சுற்றுலா, விவசாயம், மீன்பிடித்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகர்ப்புற வளர்ச்சி அல்லது பிற பயன்பாடு என தீவை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து விலை மாறுபடும். இந்த தீவுகள் பொதுவாக சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு காரணங்களுக்காக வாடகைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை மற்றும் குறிப்பிட்ட வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுத் திட்டங்களுடன் இணங்குவதை நிரூபிக்க வாடகைதாரர் திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். கடுமையான ஆய்வுக்கு பிறகுதான் வாடகைதாரர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தீவுக்கு சாவி வழங்குகிறார்கள்.

செயற்கைத் தீவுகளைக் கட்டியெழுப்புவதற்காக அகழ்வாராய்ச்சி மற்றும் நிலத்தை மீட்டெடுப்பதில் சீனா சமீபத்திய ஆண்டுகளில் சர்வதேச ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் கடல் வாழ்விடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை சீன அரசு அழிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 2018ல் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அறிக்கைக்கு பின்னர் வணிகரீதியான நில சீரமைப்புக்கு அளித்த அனுமதியை ரத்து செய்வதாக சீன அரசு அறிவித்தது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom