Type Here to Get Search Results !

பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும் - எல்.முருகன்




பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த எல்.முருகன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த போது, அதிமுக-பாஜக உறவு சுமுகமாகவே உள்ளது என்றார்.

மேலும் குற்றப்பின்னணி உடையவர்கள் பாஜகவில் இணைவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அனைவரும் மிஸ்டு கால் மூலமே கட்சியில் இணைவதால் பின்புலம் குறித்து ஆராய முடிவதில்லை என்றும், கட்சியில் சேர்ந்த பின்னர் குற்றச்சாட்டு எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom