Type Here to Get Search Results !

இந்து கடவுளை இழிவாக பேசிய திமுக கூட்டங்கள், திருமாவளவன் போன்ற நபர்களுக்கு எந்தவித நடவடிக்கை இல்லை அருண் மீது நடவடிக்கை ஏன்..?



கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி ஏஜென்ட் காலனி முன்பு ஈ வே ரா  சிலை உள்ளது. இந்த சிலை மீது கடந்த 17-ம் தேதி மர்ம நபர்கள், காவி வண்ணத்தைப் பூசியதாக கூறப்பட்டது இதுதொடர்பாக, திராவிட கழகத்தை சேர்ந்த  சந்திரசேகர் என்பவர் அளித்த புகாரின் பேரில் 153, 153 ஏ(1)(பி), 504 இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

இதைத் தொடர்ந்து, மறுநாள் கோவை  செட்டிபாளையம் சாலை போத்தனூரைச் சேர்ந்த, பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளரான அருண் கிருஷ்ணன் (21) காவல்துறையிடம் சரண் அடைந்தார். இவரை குனியமுத்தூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக, விசாரணையில், கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில், இந்து கடவுள் முருகன் குறித்து அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டி, மேற்கண்ட செயலில் ஈடுபட்டதாக அவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார்.

இந்நிலையில், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செயல்பட்ட அருண் கிருஷ்ணனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டார். அதன்படி, அருண் கிருஷ்ணனை குனியமுத்தூர் காவல்துறையினர் ஜூலை 28 அன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கான ஆணையை நேற்று மாலை சிறைத்துறை நிர்வாகத்திடம் வழங்கினர்.

மற்றும் இதுகுறித்த தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது, இந்த நிலையில் பொறுத்து பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளனர், தமிழகத்தில் கடவுள் சிலைகளை உடைத்தவன், பன்றிக்கு பூணூல் என்ற பெயரில் இந்து மதத்தை தொடர்ந்து அவமான படுத்துபவர்களை சாதாரண வழக்கில் கைது செய்து மறு நாளே ஜாமினில் விடுவித்த காவல்துறை அருணை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது ஏன் எனவும் கொந்தளித்துள்ளனர்.

வினைக்கு காரணமாக இருந்த கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த 15 நபர்களை கைது செய்யவில்லை,அந்த அமைப்பிற்கு பணம் கொடுத்து உதவியவர்களை கைது செய்யவில்லை, நாட்டில் மத பிரச்னையை உண்டாக்கிய சுரேந்திரன் என்பவன் மீது குண்டர் சட்டம் ஆனால் அதற்கு எதிர்ப்பை தெரிவித்த அருண் மீது NSA எனும் தேசிய பாதுகாப்பு சட்டமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் தமிழக அரசு உடனடியாக NSA சட்டத்தில் அருண் கைது செய்ததை விளக்கிக்கொள்ளவில்லை என்றால்போராட்டத்தில் இறங்குவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர், மேலும் CAA சட்டதிருத்தத்தின் போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தைகொளுத்தியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்காமல் சாதாரண வழக்கில் அருண் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டு இருப்பதற்கு பல தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நீதி துறை, காவல்துறை, உள்ளிட்டவர்களை ஒருமையில் பேசிய சுந்தரவள்ளி, இந்து கடவுளை இழிவாக பேசிய திமுக கூட்டங்கள், திருமாவளவன் போன்ற நபர்கள் எந்தவித நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் தமிழகத்தில் சுதந்திரமாக வலம் வரும் நிலையில் அருண் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டதன் அவசியம் என்ன?

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom