வெளியானது ‘அண்டாவ காணோம்’ டீஸர்; ஆகஸ்ட் 28 திரைப்படம் வெளியீடு.!விஜய் சேதுபதியின் குரல் பின்னணியுடன் வெளியான அண்டாவ காணோம் டீஸர் தற்போது வைரலாகிவருகிறது.

தமிழில் விஷாலின் ‘திமிரு' படத்தில் மிரட்டலான வில்லியாக அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. இதனைத் தொடர்ந்து ‘வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘அண்டாவ காணோம்'.


சி.வேல்மதி இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் ‘அண்டா'விற்கு கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார். அஸ்வமித்ரா இசையமைத்துள்ள இதற்கு ஒளிப்பதிவாளராக பி.வி.ஷங்கர், படத்தொகுப்பாளராக சத்யராஜ் நடராஜன், கலை இயக்குநராக ஏ.கே.முத்து, பாடலாசிரியராக மதுரகவி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தை ‘JSK ஃபிலிம் கார்ப்பரேஷன்' நிறுவனம் ஜே.சதீஷ் குமாருடன் இணைந்து ‘லியோ விஷன்' நிறுவனம் சார்பில் வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டே இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.

சுமார் 3 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி இந்த படம் OTT தளத்தில் வெளியாகிறது. இப்போது இப்படத்தின் டீஸர் மக்கள் செல்வனால் வெளியிடப்பட்டு வைரலாகிவருகிறது.

Post a comment

0 Comments