திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 டிக்கெட் மூலம் சுவாமி தரிசனத்திற்கான முன்பதிவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 டிக்கெட் மூலம் சுவாமி தரிசனத்திற்கான முன்பதிவு ஆன்லைனில் இன்று துவங்கியதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நோய் பாதிப்புகள் அதிகரித்து வந்தபோதிலும், ஆந்திர மாநிலத்தின் திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்கின்றனர். ஜூன் 11 முதல் சுவாமி தரிசனத்திற்கு குறைந்த அளவில் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், தொடர்ந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி, திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து விட்டு வர வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.

ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு விஷ்ணு நிவாசம், சீனிவாசம், மாதவம் ஆகிய விடுதிகளில் டைம் ஸ்லாட் (நேரம் ஒதுக்கீடு) டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டைம் ஸ்லாட் டோக்கன், நேரிலும், ஆன்லைனிலும் கிடைக்கும். தற்போதைய கணக்கின்படி, அடுத்த மாதத்தில், 9000 பேர் தரிசனம் செய்யப்டுவார்கள் என கூறப்படுகிறது. நோய் தொற்றால், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது.

பக்தர்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்ற்றுவது, கைகளை சுத்தமாக வைத்து கொள்வது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கையை கண்காணிக்க, திருமலை பணியாளர்கள், பிபிஇ உபகரணங்களுடன் உள்ளனர். அத்தடன் பக்தர்களின் வெப்பநிலையை சரிபார்க்க தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த முறைகளில் எண்ணற்றவர்கள் தினமும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். தொடர்ந்து, ஜூலை மாதத்திற்கான, ரூ.300 டிக்கெட் மூலம் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்நிலையில் ஒதுக்கீடு அடிப்படையில் தினமும் 9 ஆயிரம் டிக்கெட்டுகள் (ரூ.300 தரிசன டிக்கெட்) வழங்கப்படவுள்ளது. இதற்காக இன்று (ஜூன் 29) ரூ.300 டிக்கெட் முன்பதிவு, திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Post a comment

0 Comments