Type Here to Get Search Results !

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்த வெட்டுக்கிளிகளால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

டிரான்களை பயன்படுத்தி ...

வட மாநிலங்களில், ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், வெட்டுக்கிளிகள் வருகை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில், நேற்று மாலை, ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்தன. இவை, வட மாநிலங்களில் இருந்ததை போல, பழுப்பு நிறத்தில் இருந்ததால், விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து, அவர்கள், வேப்பனஹள்ளி, தி.மு.க., - எம்.எல்.ஏ., முருகன் மற்றும் வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இரவாகி விட்டதால், நேற்று யாரும் நேரலகிரி செல்லவில்லை. இன்று வேளாண் அதிகாரிகள், அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.