Type Here to Get Search Results !

சென்னையில் அறிகுறி இல்லாத கொரோனா

சென்னையில் 98 சதவீதம் பேருக்கு ...

சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறி ஏதும் தென்படவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. 768 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நிருபர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் 98 சதவீதம் எந்தவித அறிகுறியும் இல்லை. பாதுகாப்பு கருதியே கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர்கள் தனிமைபடுத்தப்பட்டனர்

கடந்த 24ம் தேதி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 28 ம் தேதி அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஆனால், சில மணி நேரத்தில் தாயும், குழந்தையும் இறந்தனர். பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. அதில், அந்த பெண்ணுக்கு கொரோனா உள்ளது உறுதியானது. இதனையடுத்து அவரது உறவினர்கள், பிரசவம் பார்த்த டாக்டர்கள், நர்சுகள், அவருடன் இருந்த நேயாளாளிகள் என 40க்கும் மேற்பட்டவர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

பலி அதிகரிப்பு

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 65 வயதுஆண்டு நுரையீரல் புற்றுநோயால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உள்ளது தெரியவந்தது. அவர் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், நேற்று(ஏப்., 29) உயிரிழந்தார். இதனையடுத்து சென்னையில் மட்டும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, புற்றுநோய் பாதித்தவரின் 26 வயது மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சென்றவருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள செட்டிக்குறிச்சியை சேர்ந்த 40 வயது கட்டட தொழிலாளி சென்னையில் பணிபுரிந்தார். ஊரடங்கு காரணமாக, வேலை, உணவு கிடைக்கவில்லை. இதனால், அவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து கிளம்பினார். வழியில் காரில் சென்றவர்கள், ஏற்றி அருப்புக்கோட்டை அருகே இறக்கிவிட்டனர். தொடர்ந்து நடந்தே சொந்த ஊர் திரும்பினார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு நடந்த சோதனையில் கொரோனா உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கூலி தொழிலாளிக்கு கொரோனா

அதேபோல், அரியலூர், செந்துறை அருகேயுள்ள நக்கம்பாடியை சேர்ந்தவவர், கோயம்பேட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்றினார். கடந்த 27 ல் சொந்த ஊர் திரும்பினார். சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவ குழுவினர் அவருக்கு பரிசோதனை நடத்தினர். அதில், அவருக்கு கொரோனா உள்ளது உறுதியானது. இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் இடமில்லை!

இதனிடையே, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இடமில்லை எனக்கூறப்படுகிறது. கொரோனா வார்டு முழுவதும் நிரம்பியதாகவும், இதனால், அங்கு வருபவர்கள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

மக்கள் குவிந்தனர்

கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியில் அமல்படுத்தப்பட்ட 4 நாள் ஊரடங்கு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இன்று காலை கடைகள், மார்க்கெட்கள் திறக்கப்பட்டன. இதனையடுத்து, பொருட்களை வாங்க மக்கள் மார்க்கெட்களில் ஒரே நேரத்தில் குவிந்தனர். கோயம்பேடு மார்க்கெட்டில், மொத்த விற்பனை மட்டுமே நடந்தது. சில்லரை விற்பனை அனுமதிக்கப்படவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom