Type Here to Get Search Results !

ஜெர்மனியில் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா?

Baird Analyst Says 'Don't Give Up' Yet On Gilead's Remdesivir

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிபைஸர் என்கிற அமெரிக்க மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஜெர்மன் நிறுவனம் பணிபுரிகிறது. இந்த நிறுவனம் கொரோனாவுக்கு தற்காலிக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் உலக நாடுகளுக்கு விற்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வரும் 2020-ம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை உலக நாடுகள் முழுவதும் சப்ளை செய்ய தாங்கள் ஆயத்தமாக இருப்பதாக பிபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்தில் கொரோனாவுக்கு நிரந்தரமான தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கான சோதனையில் இறங்க உள்ளதாக பிபைஸர் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் குளிர்காலத்தில் இந்த தடுப்பு மருந்து அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் என பிரபல அமெரிக்க இதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. ஜெர்மனி ஆய்வு கூடத்தில் 12 ஆரோக்கியமான இளைஞர்களுக்கு பரிசோதனையில் இருந்த BNT162 தடுப்பு மருந்து கடந்த ஏப்.,23ம் தேதி கொடுக்கப்பட்டது. இது உண்மையாகவே கொரோனாவுக்கு எதிராக வேலை செய்கிறதா எனத் தெரியவில்லை.

1 µg- 100 µg அளவு தடுப்பு மருந்து சோதனை அடிப்படையில் 18 முதல் 55 வயதுள்ள 200 ஆரோக்கியமான நபர்களுக்கு கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக பயான்டெக் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. பிபைசர்-பயான்டெக் நிறுவனங்கள் இணைந்து BNT162 கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் மேலும் தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஜெர்மனியின் ஜெர்மன் பெடரல் இன்ஸ்டிடியூட் பார் வேக்ஸின்ஸ் ஆய்வு அமைச்சகத்திடம் இந்த தடுப்பு மருந்து சோதனை முடிவுகள் காண்பிக்கப்படும். அதன் அனுமதிக்கு பின்னரே இந்த மருந்து விற்பனைக்கு வருமெனத் தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom