Type Here to Get Search Results !

கொரோனாவை பரப்பி உலகை ஆள நினைக்கும் சீனாவின் வஞ்சக எண்ணம் ஈடேறுமா?



கொரோனா வைரசை உருவாக்கி, பரப்பியதன் பின்னணியில், உலகை ஆள வேண்டும் என்ற குள்ளநரித்தனம், சீனாவிடம் ஒளிந்திருப்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. இன்னும் சொல்லப் போனால், கொரோனா வைரஸ் மூலம், மூன்றாம் உலகப் போர் துவங்கி விட்டதாகவே கருதலாம்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், அங்கு, 4,000க்கும் அதிகமானோரை பலி வாங்கி, அடங்கி விட்டது.

தற்போது, அங்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். மூடப்பட்ட தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் தயாரிப்பு வேகமெடுத்துள்ளது. ஆனால், சீனாவில் இருந்து பரவிய கொரோனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட நாடுகளை முடக்கி, இரண்டு லட்சம் பேரை பலி வாங்கியுள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள், கொரோனாவை தடுக்கவும், மருத்துவ சிகிச்சைக்கும், மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், பொருளாதாரத்தை மீட்கவும் போராடி வருகின்றன.ஆனால், சீனா, உலகை ஆள வேண்டும் என்ற இலக்கை நோக்கி, ஓசைப்படாமல் ஒவ்வொரு அடியாக முன்னேறி வருகிறது. அதில், ஐந்து அம்சங்களை மட்டும் பார்க்கலாம்.




கச்சா எண்ணெய் சேமிப்பு

கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்து, தேவை குறைந்துள்ளதால், அதன் விலை, வரலாறு காணாத வகையில் சரிவடைந்துள்ளது. ஊரடங்கால் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. இதனால், பல நாடுகளின், கச்சா எண்ணெய் கையிருப்பு அதிகரித்து, சேமித்து வைக்க திணறி வருகின்றன. இந்த சமயத்தில், சீனா, வழக்கத்தை விட அதிகமாக, கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த மார்ச்சில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 4 சதவீதம் உயர்ந்துள்ளது. சீனா, அதன் மொத்த எண்ணெய் கொள்ளளவில், 65 சதவீதத்தை சேமித்து வைத்துள்ளதாக, ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இது போதாதென்று, மூன்று பிரமாண்ட எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை சீனா கட்டி வருகிறது.கச்சா எண்ணெய்க்கு, பிற நாடுகளை சார்ந்திருக்க சீனா விரும்பாததே இதற்கு காரணம்.

நிதியுதவி

உலக சுகாதார அமைப்புக்கு நிதி தருவதில், அமெரிக்கா தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, கொரோனா பிரச்னையில், சீனாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக, அமெரிக்க அதிபர், டிரம்ப் குற்றஞ்சாட்டி, அதற்கு வழங்கும் நிதியை நிறுத்தி விட்டார்.இதைப் பயன்படுத்தி, ஏற்கனவே அறிவித்த, 150 கோடியுடன், தற்போது, மேலும், 225 கோடி ரூபாய் நிதி தருவதாக, சீனா அறிவித்துள்ளது. இது, உலக சுகாதார மையத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் துவக்கம்.

தானிய கொள்முதல்

கொரோனாவால் பஞ்சம் வரும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், சீனா, உணவு தானியங்களை வேகமாக சேகரித்து வருகிறது. ஏற்கனவே இறக்குமதியான, 3 கோடி டன் சோயா, மேலும், 1 கோடி டன் இறக்குமதி செய்ய, சீனா திட்டமிட்டுள்ளது. அதுபோல, 2 கோடி டன் சோளம், 10 லட்சம் டன் பருத்தி ஆகியவையும், அதன் கிடங்கில் சேர்ந்துள்ளன.சீனா, 2017ல் வாங்கியதை விட, இந்தாண்டு, கூடுதலாக, 93 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, உணவுப் பொருட்களை, அமெரிக்காவிடம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

விற்பனையில் லாபம்

வூஹான் நகரில் கொரோனா பரவியதும், இதர நாடுகளில் உள்ள சீன நிறுவனங்கள், 200 கோடி முக கவசங்களை கொள்முதல் செய்து அனுப்பி வைத்தன. இந்த வகையில், பிப்., 29 நிலவரப்படி முக கவசம் உள்ளிட்ட மருத்துவ பாதுகாப்புக்கான, 246 கோடி உபகரணங்கள் சீனாவில் இறக்குமதி ஆகின. சுங்க அதிகாரிகளின் சோதனைக்குப் பின், அவை உலக நாடுகளுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. உலக சுகாதார அமைப்பின் மேற்பார்வையில், இந்த விற்பனை நடைபெற்றுள்ளது.

நிறுவனங்கள் வளைப்பு

கொரோனாவால் பொருளாதார சரிவை சந்தித்துள்ள நாடுகளில், ஏராளமான நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிவடைந்துள்ளது. இதை சாதகமாக்கி, பிற நாடுகளின் முன்னணி நிறுவனங்களை வளைத்துப் போடவும், சீனா முயற்சித்து வருகிறது.சமீபத்தில், சீன மத்திய வங்கி, இந்தியாவின் வீட்டு வசதி கடன் நிறுவனமான, எச்.டி.எப்.சி.யின், 1 சதவீத பங்கை, 3,000 கோடி ரூபாய்க்கு வாங்கியது. சுதாரித்த இந்தியா, இனி, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள், அரசு அனுமதியின்றி, நேரடி முதலீடு மேற்கொள்ள தடை விதித்துள்ளது.ஆனால், பல நாடுகள் இன்னும் சீனாவின் வஞ்சகத்தை புரிந்து கொள்ளாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் உள்ளன. உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவை, கொரோனாவால் வீழ்த்தி, அந்த சிம்மாசனத்தை கைப்பற்ற சூழ்ச்சி செய்து வரும் சீனாவின் எண்ணம் ஈடேறுமா என்பதை, காலம் தான் பதில் சொல்லும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom